டி ஆர் பி இல் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய சீரியல்.! முந்தி கொண்டுவரும் சிறகடிக்க ஆசை.! இதோ டிஆர்பி முழு லிஸ்ட்..

பொதுவாக தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வரும் அதிலும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறார்கள், சீரியல் என்றாலே மாமியார் மருமகள் சண்டை, காதல் கதை, குடும்ப கதை, பெண்ணியம் பேசும் கதை என பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி யில் எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு காணலாம்.

வழக்கம்போல் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த சிங்க பெண்ணே சீரியலில் மனீஷா மகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் வெவ்வேறு துறையில் இயங்கும் பெண்களை பறைசாற்றும் வகையில் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அடப்பாவிகளா எதிர்நீச்சலுக்கு இந்த நிலைமை.! அதிரடி மாற்றத்திற்கு காரணம் இந்த இரண்டு சீரியல் தானா.?

அதேபோல் இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் இருக்கிறது பவித்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஜா ராணி தொடர் புகழ்  சஞ்சீவ் கார்த்திக் தொடரின் கதாநாயகனாக நடிக்கிறார் ராகுல் ரவி அபிநயா காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த தொடர் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வானத்தைப்போல சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியலில் அண்ணனாக ஸ்ரீகுமார் அவர்களும் பாசமான தங்கை கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் செந்தில்குமாரி மன்யா ஆனந்த் தமன்குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த தொடர் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்க்கு வந்த குடைச்சல்.! மண்டபத்தை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக மாற்றிக்கொண்ட தளபதி.!

நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் ஆரம்ப காலகட்டத்தில் டிஆர்பி யில் முதலிடம் பிடித்து வந்த இந்த சீரியல் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு டிஆர்பி யில் சருக்களை சந்தித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடர் பெண்களின் உரிமை பேசும் தொடராக இருக்கிறது திருச்செல்வம் இந்த தொடரை இயக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரும் நடித்துள்ளார் நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இடம் பிடித்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் இருக்கிறது கேப்ரியலா நாயகியாக நடத்துள்ளார் இந்த சீரியல் நிறம் குறைவாக இருக்கும் பெண் எவ்வளவு சிரமங்களை சந்திக்கிறார் என்பது கதையாக இருந்தது ஆனால் அவர் அனைத்து சிரமங்களையும் சந்தித்து ஐஏஎஸ் அதிகாரியாக ஆன பிறகு எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் தரிசனம் கொடுத்த சிறகடிக்க ஆசை மீனா.! வைரலாகும் புகைப்படம்

ஆறாவது இடத்தில் சிறகடிக்க ஆசை முதல் ஐந்து இடத்தில் சன் தொலைக்காட்சி இருந்தாலும் ஆறாவது இடத்தில் சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது இந்த சீரியலில் முத்து மீனா இருவரும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள் மீனா ஏழ்மையான குடும்பத்தின் பெண் அவர் எப்படி மாமியார் வீட்டில் நடந்து கொள்கிறார் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை. இப்படி ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு இடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்