அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்க்கு வந்த குடைச்சல்.! மண்டபத்தை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக மாற்றிக்கொண்ட தளபதி.!

Thalapathy Vijay: தளபதி விஜய் அரசியல் குறித்த செய்தி அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அரசியல் வருவதற்கு முன்னரே பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய். தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார் கடந்த 2025ஆம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை எனவும் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் எனவும் விஜய் கூறியுள்ளார்.

முழு நேரம் அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருக்கும் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் விஜய்யின் மண்டபங்கள் மாற்றப்பட்டது குறித்த தகவல் கசிந்துள்ளது. சென்னையில் விஜய் தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோர்களின் பெயரில் பல திருமண மண்டபங்களை வைத்துள்ளார்.

அர்ஜுனை கடத்தி துன்புறுத்தும் தமிழ்.. அண்ணன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த ரோகினி.. உண்மையை சொல்ல வந்த பரமு..

சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமண மண்டபம், வடபழனியில் ஒரு திருமண மண்டபம், அடுத்து போரூரில் சங்கீதா திருமண மண்டபம் என்று தனது மனைவி பெயரிலும் அதோட மட்டுமல்லாமல் புதுக்கோட்டையிலும் திருமண மண்டபம் உள்ளது. இந்த சூழலில் சென்னையில் வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதியில் உள்ள மூன்று மண்டபங்கள் முறையான பத்திரத்துடன் உள்ளதா? மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? வேறு என்ன வில்லங்கங்கள் உள்ளன என்று திருமண மண்டபத்திற்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.

Thalapathy Vijay
Thalapathy Vijay

சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் சில மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்காக மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

முதல் கட்டமாக போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபம் தற்பொழுது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி ஆக மாறி உள்ளது இன்னும் சில மண்டபங்கள் இதே போல் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு விஜய் யோசித்து வருகிறாராம்.