Lal Salaam Review: “பாய் பம்பாய்ல வேற லெவல்..” ரஜினியின் லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்..

Lal Salaam Review: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 

லால் சலாம் படத்திற்கு விமர்சனங்கள் கிடைத்து வருவதனால் படக்குழுவினர்கள் உற்சாகத்தில் உள்ளனர். லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் மும்பை ரிட்டன்ஸ் கேங்ஸ்டர் மொய்தின் பாய் கேரக்டரில் ரஜினி நடித்ததால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெரிதளவிலும் இருந்தது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

இந்த சூழலில் பிப்ரவரி 9தாம் தேதி இன்று லால்  சலாம் வெளியானது தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ இல்லை என்றாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் லால் சலாம் படம் வெளியிடப்பட்டது இதனை பார்த்து ரசிகர்கள் தங்களது பதிவினை தெரிவித்து வருகின்றனர்.

Lal Salaam Review
Lal Salaam Review

அதன்படி, லால் சலாம் படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் வெளிநாடுகளில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆக்சன் மூவியாக உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் தனது அப்பா ரஜினியை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

Lal Salaam Review
Lal Salaam Review

இதனை அடுத்து இடைவேளை காட்சிகளில் ரஜினியின் என்ட்ரி வேற லெவல், பம்பாய்ல பாய் ஆளே வேறடா என ஹை கொடுத்துள்ளார்கள். மற்றொரு நெட்டிசன் ரஜினி இன்ரோ சீனை ட்விட்டரில் ஷேர் செய்து எதிர்பாராத தலைவர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் தனது ஸ்டைலில் மாசான என்ட்ரி கொடுத்துள்ளார் ரஜினி.