அர்ஜுனை கடத்தி துன்புறுத்தும் தமிழ்.. அண்ணன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த ரோகினி.. உண்மையை சொல்ல வந்த பரமு..

Thamizhum saraswathiyum february 9 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் நமச்சி ஜெயிலில் சித்திரவதை அனுபவிக்கும் சரஸ்வதியை பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள் அப்பொழுது ஜானிமில் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். அந்த சமயத்தில் அர்ஜுன் மற்றும் பரமு வருகிறார்கள் அப்பொழுது தமிழிடம் வம்பு வளர்த்த ஆரம்பிக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி ஜெயிலில் கஷ்டப்படுவது போல் தெரிகிறது என கூறுகிறார்கள் உடனே ஜெயிலில் சரஸ்வதி டார்ச்சர் செய்ய சொன்னது இவர்கள்தான் என புரிந்து கொள்கிறார் தமிழ்.

உடனே அர்ஜுனை உதைத்து பரமுவை அடித்து இருவரையும் கட்டி காரில் ஏற்றிக்கொண்டு குடவனுக்கு செல்கிறார்கள். அங்கு அர்ஜுனை அடி அடி என அடித்து துன்புறுத்துகிறார் தமிழ் அது மட்டுமே இல்லாமல் பரமுவையும் நமச்சி அடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் அங்கு கண்ணாடி துண்டு கிடந்தது அது யாருடையது என பரமுவை அடிக்க உடனே பரமு அது என்னுடையது தான் அடி வாங்கா முடியாமல்  ஒப்புக்கொள்கிறார் அடுத்ததாக கொலை செய்தது யார் என அடித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

அதற்குள் அர்ஜுனை காரில் கடத்தி வந்ததை ஒருவர் பார்த்துவிட்டு ரோகிணிக்கு கூறி விடுகிறார் உடனே ரோகிணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னுடைய புருஷனை அந்த தமிழ் கடத்திவிட்டார் உடனே காப்பாற்ற வேண்டும் என அழைத்துக் கொண்டு போகிறார். . தமிழ் தன்னுடைய கம்பெனி குடவனில் தான் அர்ஜுன் மற்றும் பரமுரை அடைத்து வைத்திருக்கிறார். அது தெரிந்து போலீஸ் உடன் ரோகினி செல்கிறார்.

பரமு கொலை செய்தது யார் என்று சொல்ல வருவதற்குள் ரோகிணி போலீஸ் உடன் அங்கு வந்து விடுகிறார் உடனே ஒரே நாடகமாக இருவரும் நடத்துகிறார்கள் அர்ஜுன் உங்கள் அண்ணன் பார் எப்படி அடிச்சிருக்காரு என ஏற்றி விடுகிறார். உடனே அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க என அனைவரும் அழைத்து செல்கிறார்கள்.

என்னதான் இயக்குனராக இருந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்ட 5 இயக்குனர்கள்.!

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரோகிணி இவர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என கூறுகிறார் உடனே போலீஸ் அவர் மீது கம்ப்ளைன்ட் பண்ண வேண்டாம் அவருடைய மனநிலையை கொஞ்சம் நீங்க புரிஞ்சுக்கிறிங்களா என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழுக்கு அட்வைஸ் செய்து அனுப்புகிறார் அதே போல் வெளியே வந்த தமிழ் எல்லாம் சொல்ல வர நேரத்துல இப்படி ஆயிடுச்சு என ஃபீல் பண்ணுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்