கதிருக்கு திருமணத்தை செய்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்த கோமதி துருவி துருவி கேள்வி கேட்கும் பாண்டியன்.! விழி பிதுங்கி நிற்கும் மீனா..

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் இன்று கதிருக்கும் ராஜுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. கல்யாணம் முடிந்ததும் பொண்ணு மாப்பிள்ளை கோமதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அதைத் தொடர்ந்து கோமதி பாக்கியாவிடம் இப்ப நடந்த கல்யாணத்துக்கு நீங்க தான் எல்லா உதவியும் செஞ்சீங்க அந்த கடவுள் தான் உங்களை இங்க அனுப்பி வச்சிருக்காரு என சொல்லி அழுகிறாள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து இன்னொரு உதவியும் செய்து விடுங்கள், இவங்கள கொண்டு வந்து வீட்ல விட்டுடுங்க என பாக்யாவிடம் உதவி கேட்கிறாள். சொல்லிவிட்டு மீனாவும்  கோமதியும் ஊருக்கு கிளம்புகின்றனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து  கதிரும் ராஜியும் ரூமில் உட்கார்ந்து இதற்கு முன் நடந்ததை யோசித்துப் பார்க்கின்றனர்.

சுருதி செய்த வேலையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அண்ணாமலை.! காப்பாற்ற ஓடும் மீனா.. முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப துடிக்கும் ரோகினி …

அனைவரும் ஹோட்டலை காலி பண்ணி விட்டு ஊருக்கு கிளம்புகின்றனர். கோமதியும் மினாவும் வழியிலேயே காரை விட்டு இறங்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா இங்கு நடந்த எந்த விஷயத்தையும் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நான் யார்கிட்டயாவது சொல்லிடுவேன்னு நினைச்சு பயப்படாதீங்க. என் புருஷன் கிட்ட கூட சொல்ல மாட்டேன் என சொல்கிறாள். பின்பு இவர்கள் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். அப்போது காரை விட்டு இறங்கியதும் பாண்டியன் கோமதியிடம்  என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்க என கேட்கிறார். அதற்கு கோமதியோ எனக்கு தலை வலிக்குது என சொல்லி விடுகிறார்.

பின்பு  கார் வாடகையை மீனா கொடுக்கிறாள். அப்போது மூர்த்தி நீ ஏம்மா பணம் குடுக்குற கதிர் எங்க இன்னும் தூங்கிட்டு இருக்கானா என கதிரை திட்டுகிறான். அப்போது மீனா கதிர் இல்லை கதிர் காலேஜ் விஷயமாக வெளியே போயிருக்காரு என பொய் சொல்லிவிடுகிறார்.

16 வயதினிலே, கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்.! பல வருடம் கழித்து உண்மையை கூறி வருத்தப்படும் நடிகை…

வீட்டுக்கு உள்ளே போனதும் மீனா விடம் அவளது புருஷன் என்ன பார்த்த சந்தோஷமே உனக்கு இல்லையே நீ ஒரு மாதிரி இருக்க எதையோ என்கிட்ட மறைக்கிற என கேள்வி கேட்கிறார். அதற்கு ஒன்னும் இல்ல உங்க அம்மா அவங்க அண்ணனையும் ராஜியையும் நினைச்சு அழுதுகிட்டு இருந்தாங்க அவங்கள சமாதானப்படுத்தினேன் அதான் டயர்டா இருக்கு என சொல்கிறாள்.

பின்பு கோமதி வீட்ல இருந்து அவங்க அம்மாவை பார்க்கிறாள். அவங்க அம்மாவோ முன்னாடி ஒரு பொண்ண பாசமா வளர்த்தேன் அவளும் போய்ட்டா. அப்புறம் பேத்தி பொறந்ததும் அவ மேல அந்த பாசத்தை காமிச்சேன் அவளும் இப்படி ஓடிப் போயிட்டா மகளைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டே அழுகிறாள். அப்போது அவரது மருமகள்களும் வந்து கோமதியை பார்த்து பாருங்க அண்ணி எங்க மகள் இப்படி பண்ணிட்டா என சொல்லி அழுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் தரிசனம் கொடுத்த சிறகடிக்க ஆசை மீனா.! வைரலாகும் புகைப்படம்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்