cook-with-comali

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து புகழை வச்சி செஞ்ச ஹன்சிகா.! சூப்பர் காம்போ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து.

தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஹன்சிகா புகழை நீ அதிகமாக பெண்களுடன் விளையாடுகிறாய் உனக்கு திருமணம் ஆயிடுச்சி தானே என மிரட்டி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நான்காவது சீசனில் கோமாளியாக மூன்று சீசன்களாக பங்கு பெற்று வந்த சிவாங்கி தற்பொழுது குக்காக களம் இறங்கி இருக்கிறார். இவரை அடுத்து மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பன், காளையன், கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் ஆகியவர்கள் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சில்மிஷம் சிவா, தங்கதுரை, குரேஷி, சிங்கப்பூர் தீபன், புகழ், மோனிஷா, ரவீனா தஹா, மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து ஆகியோர்கள் கோமாளிகளாக பங்கு பெற்று வரும் நிலையில் கடந்த வார எலிமினேஷன் நடைபெற்றது அதில் கிஷோர் ராஜ்குமார் எலிமினேட் செய்யப்பட்டார்.

எனவே இந்த வாரம் அனைத்து குக்குகளும் மிகவும் பிரமாதமாக சமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் எந்த வாரம் ப்ரோமோ வீடியோவில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் புகழ் பெண்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது நீ பெண்களுடன் ரொம்ப விளையாடுற உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல என்று மிரட்டியதும் எதுவும் தெரியாதது போல் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என புகழ் கேட்காததற்கு ஹன்சிகா சிரிக்கிறார்.