மணிமேகலை அவசர அவசரமாக CWC நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம்.. செஃப் தாமு சொன்ன உண்மையான தகவல்

cook-with-comali
cook-with-comali

சின்னத்திரையில் வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகின்றது.  அதிலும் விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” என்ற காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பிளாக் பஸ்டர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் வரும் ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் மத்தியில் படும் பிரபலம். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நான்காவது சீசன் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருப்பதே இதில் கோமாளியாக கலந்து கொண்டு வந்த புகழ், பாலா, சுனிதா, சிவாங்கி, மணிமேகலை போன்றவர்கள் அடிக்கும் லூட்டி தான் இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கண்டுகளித்து வருகின்றனர்.

இதனை ரக்சன் தொகுத்து வழங்க செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஜட்ஜாக இருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சிவாங்கி குக்காக இருந்து வருகிறார். மேலும் இதில் கோமாளியாக கலந்து கொண்டு வந்த மணிமேகலையும் சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

மணிமேகலைக்கா வே இந்த ஷோவை பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். அவருடைய ரசிகர்கள் மணிமேகலை ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்ற குழப்பத்திற்கு இருக்கும் போது தற்போது அதற்கு பதிலும் கொடுத்து உள்ளார். செஃப் தாமு கூறியது மணிமேகலை எனக்கு மகள் போன்றவர்,

அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியது எங்களுக்கு மிகவும் வருத்தம்.. அவரது காமெடியை நான் மிஸ் பண்ணுவேன், அவர் ஆங்கர் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நான் நினைக்கிறேன் ஏனென்றால் அவரது எதிர்காலமும் முக்கியம். இதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சி விட்டு வெளியேறினார் என்ற உண்மையை செஃப் தாமு ஒரு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.