குக் வித் கோமாளி 4 – லிருந்து அடுத்தடுத்து வெளியேறும் கோமாளிகள்.. இப்போ யார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்

சின்னத்திரையில் பிரபல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி. இதன் முதல் மூன்று சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வர செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இதில் ஜட்ஜ் ஆக இருந்து வருகின்றனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நடந்து வருகிறது.

இதில் குக்காக பல செலிபிரிட்டி கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து அசத்துகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக கோமாளிகள் லூட்டி அடிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இதில் உள்ள கோமாளிகள் தான். கடந்த சீசன் வரை புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி, சுனிதா, தங்கதுரை, குரேஷி போன்ற பலரும் கோமாளியாக கலந்து கொண்டு காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்து வந்தனர்.

ஆனால் இந்த சீசனில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மற்றும் புதிய கோமாளிகளும் சிலர் கலந்து கொண்டனர் . கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி இதில் குக்காக கலந்து கொண்டுள்ளார், பாலாவும் இந்த சீசனில் கோமாளியாக கலந்து கொள்ளவில்லை இவர்களை தொடர்ந்து மணிமேகலையும் சில வாரங்களுக்கு முன்பு திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிமேகலை கிராமத்தில் இடம் வாங்கி அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். கிராமத்துக்கும் சென்னைக்கும் அலைய முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவரைத் தொடர்ந்து தற்போது வேறு ஒரு கோமாளியும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

kuraishi
kuraishi

ஆம் மிமிக்ரி செய்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வரும் குரேஷி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் என ஒரு டுவிட் வைரலாகின. ஆனால் அந்த ட்விட் டெலிட் செய்யப்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் குரேஷி இந்த நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்

Leave a Comment