குக் வித் கோமாளி சீசன் 4ல் விளையாடும் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா.? பார்த்ததும் தல கிரு கிருனு சுத்துதே.!

தற்பொழுது எல்லாம் மக்களுக்கு வெள்ளித்திரை படங்களை பார்ப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தான் பார்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மக்கள்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும் மேலும் இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமே போட்டியாளர்களுடன் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மட்டுமே தான் பார்ப்போரை மிகவும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விடுகிறது.

இந்நிலையில் இதில் பங்கு பெற்று விளையாடி வரும் போட்டியாளர்களின் சம்பளம் பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதன்படி பார்த்தால் சீசன் மூன்றில் கோமாளியாக இருந்து தற்பொழுது குக்காக மாறி இருக்கும் சி வாங்கி அவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 20 ஆயிரம் எனவும்.

அஜித்திற்கு தம்பியாக வலிமை திரைப்படத்தில் நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு ஒரு எபிசோடுக்கு 26 ஆயிரம் எனவும் தமிழை அழகாக பேசும் பிரஞ்சு நடிகை ஆன்ட்ரியாவுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் எனவும் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்து அனைவரையும் கவர்ந்த விஜே விஷாலுக்கு 25 ஆயிரம் கொடுக்கிறார்களாம்.

நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரம் எனவும் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வந்த விசித்திரா ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் வாங்குகிறாராம். அதனை தவிர்த்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு 35 ஆயிரம் வரை சம்பளம் தருகிறார்களாம்.

இவர்கள் கூட பரவாயில்லை இவர்களை எல்லாம் மிஞ்சி கபாலி,கதகளி, மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மைம் கோபி அவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 50 ஆயிரம் சம்பளம் தருகிறார்கள் என்று இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment