குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதற்கான காரணம் இது தான்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் மணிமேகலை திடீரென தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலிருந்து வெளியாகுவதாக சோசியல் மீடியாவின் மூலம் அறிவிக்க இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர் பிப்ரவரி 26ஆம் தேதி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் எனது கடைசி எபிசோட் என்றும் இனிமேல் குக் வித் கோமாளி நான் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதன் மூலம் அறிமுகமாகிய பிரபலமான பலரும் தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தார்கள்.

அந்த வகையில் கோமாளி சீசன் 1 கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்று வருகிறார். எனவே இதன் மூலம் நடுவர்கள், குக்குகள், ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. எந்த கெட்ட போட்டாலும் அதற்கு நிகராக தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4வது நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இரண்டாவது எபிசோடில் வழக்கம் போல் கலந்துகொண்டு காமெடி செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் நானே வருவேன் என்ற படத்தின் கெட்டப் தான் தனது கடைசி கட்டம் என்றும் இனிமேல் நான் வரமாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து ரசிகர்கள் என் மீது அன்பை பொழிந்தீர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் எனக்கு கொடுத்த வாய்ப்பை கொண்டு சிறப்பாக நான் செயல்பட எப்பொழுதும் முயற்சி எடுப்பேன் இதுவரை குக் வித் கோமாளி எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பு எதிர்பாராதது நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இதுபோன்ற ஒரு அன்பை நீங்கள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் எனவும் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் மணிமேகலை தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

Leave a Comment