kayal

கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா.. திருமணம் நடைபெறுமா? கயல் சீரியல் இன்றைய ப்ரோமோ

Kayal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து வரும் கயல்- எழில் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற ஆர்வத்துடன் கதைகளும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் முக்கிய கேரக்டரை நடித்து வருபவர் தான் கயல். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடிவரும் நிலையில் எழில் இவருக்கு பக்கபலமாக கேரக்டர் அமைந்திருக்கிறது. எப்படியாவது கயல் மற்றும் அவருடைய குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என இவருடைய பெரியப்பா தர்மலிங்கம் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

தனது தம்பி குடும்பம் என கூட பார்க்காமல் கொடுமைப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கயல் தனது வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே இழந்த நிலையில் ஹீரோவான எழில் மொத்த அன்பையும் கயலுக்கு தருகிறார். ஆனால் தன்னுடைய குடும்ப சூழலுக்காக தொடர்ந்து எழிலின் மேல் உள்ள காதலை மறைத்துக் கொண்டு வாழும் கயல் திருமணம் மண்டபத்தில் எழிலை கல்யாண கோலத்தில் பார்க்கும் பொழுது காதல் உணர்வு புரிய வருகிறது.

இவ்வாறு ஏதாவது மேஜிக் செய்தாவது கயல் மற்றும் எழிலின் கல்யாணத்தை நடத்தி வையுங்க என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். அப்படி கயலுக்கு திருமண மண்டபத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் தற்பொழுது எழிலின் அம்மா கௌதமியிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கயலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொள்கிறது.

கயலின் வாழ்க்கையை கெடுக்க கூறி சூர்யாவை செட் பண்ணியது நான்தான் என என் மகனுக்கு தெரிந்தால் அவன் என்னை மன்னிக்கவே மாட்டான் என கூற இதனை கயல் கேட்டு விடுகிறாள். கயலின் அம்மாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு இதை நீ செஞ்சு இருப்பன்னு கனவுல கூட நினைத்து பார்க்கவில்லை எனக் கூற இந்த விஷயம் தன்னுடைய மகனுக்கு தெரிய வேண்டாம் என கயலின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

கயிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எழில் நினைத்து வரும் நிலையில் திடீரென மண்டபத்தில் நடக்கும் பிரச்சனைகளால் அனைவரின் சமதத்துடன் கயலை திருமணம் செய்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் தார்மலிங்கம் மகளின் திருமண விஷயத்திலும் ஏதாவது பிரச்சனையை கிளப்புவார் என்பது தெரிந்ததே.