இந்த 5 சீரியல்கள் தான் நவம்பர் 2023ல் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியல்கள்… உங்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் லிஸ்டில் இருக்கிறதா..

Top 5 Serial Actress: நவம்பர் மாதம் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் குறித்து Ormax நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது அதேபோல் சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

முக்கியமாக சின்னத்திரை பிரபலங்களை நாள்தோறும் திரையில் பார்ப்பதனாலோ  என்னவோ விரைவில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அப்படி இவர்களுக்கு என தனி ஒரு மவுசு உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் ரசிகர்கள் மனதை கவர்ந்த டாப் 5 சின்னத்திரை பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

1. சைத்ரா ரெட்டி: தெலுங்கு சீரியல்களின் மூலம் அறிமுகமான சைத்ரா சன் டிவியின் கயல் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தனது குடும்பத்திற்காக போராடும் துணிச்சலான பெண் கேரக்டரில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் அதிகம் தேடி உள்ளனர்.

அந்த நாயி குறைக்கிற மாதிரி குறைச்சா கூட எழுந்திருக்க மாட்டான்.. நிக்சனை கிழித்து தொங்கவிட்ட அப்பா.! கலகலப்பான பிக் பாஸ் ப்ரோமோ

2. சுசித்ரா ஷெட்டி: சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் தான் சுசித்ரா ஷெட்டி. இவர் தனது குழந்தைகளுக்காக போராடிவரும் நிலையில் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

3. கார்த்திக்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்தியும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இவர் விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி தற்போது தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

4. ஆலியா மானசா: ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறார். ஒரு தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

5. மதுமிதா: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா 5வது இடத்தை பிடித்துள்ளார். குணசேகரனுக்கு எதிராக போராடிவரும் நிலையில் சொல்லும் அளவிற்கு சமீப காலங்களாக இவருடைய கேரக்டர் சுவாரசியமாக இல்லை என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.