அந்த நாயி குறைக்கிற மாதிரி குறைச்சா கூட எழுந்திருக்க மாட்டான்.. நிக்சனை கிழித்து தொங்கவிட்ட அப்பா.! கலகலப்பான பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் ஹவுஸ் மேட்ஸ்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர் அப்படி இன்று நிக்சனின் அப்பா என்ட்ரி கொடுத்து நிக்சனை வச்சு செய்துள்ளார்.

பல சண்டை சச்சரவுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் சமீப காலங்களாக மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் முதல் தான் சண்டைகள் இல்லாமல் இருந்து வருகிறது.

பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

இதனை அடுத்து இந்த வாரம் ரவீனா, சரவணன் விக்ரம் மற்றும் விசித்ரா மூன்று பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர் இவர்களில் சரவண விக்ரம் அல்லது ரவீனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மா போன்றவர்களின் பெற்றோர்கள் நேற்று வந்தனர்.

இதனை அடுத்து இன்று நிக்சன் அப்பா வந்துள்ளார் அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களையும் கலகலப்பாக பேசி சிரிக்க வைத்துள்ளார். அதாவது மிக்சனிடம் அவரது அப்பா நேரத்தில எழுந்திருக்கிறாயா?

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்..

7 மணிக்கு எழுந்திரிப்பாரு ஈவ்னிங்ல இங்க நாய் குறைக்கிதுல அந்த நாய் மாதிரி குறைச்சா கூட எழுந்திருக்க மாட்டாரு இவ்ளோ நாளா போராடினேன் இவன் மாற மாட்டானா மாற மாட்டானான்னு சொல்லி வச்சி செஞ்சீங்க ஒவ்வொருத்தரும் எனக் கூற பிறகு பிக் பாஸ் இடம் உங்களால் தான் கத்துக்கிட்ட நான் அடிச்சும் திருந்தாத பிள்ளையை ஆப்பு வச்சி திருந்தலான்னு கேப்டன்ஷிப் கொடுத்து பெல்லையும் கட்டி விட்டுட்டாரு பாருங்க எனக்கூறு அனைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். நிக்சன் திருந்திட்டேன்னு சொல்ல இதற்கு அவருடைய அப்பா திருந்திட்டனு சொன்ன பாத்தியா ப்ளாக்ல இருந்து உன்னோட நம்பர் எடுத்துடறேன் என மிகவும் நகைச்சுவையாக பேசி உள்ளார்.