விஜய்யை தூக்கிவிட்ட துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே..

thullatha manamum thullum : 1996 ஆம் ஆண்டு எழிலியக்கத்தில் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் விஜய் சிம்ரன் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் மணிவண்ணன், தாமு, வையாபுரி, மதன் பாபு, பொன்னம்பலம், தாடி பாலாஜி, கே ஆர் வசந்தலா, என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார் அதேபோல் விஜய் ஒரு பாடகர் போலவும் பல பாடல்களைப் பாடும் பொழுது பாடலை பிடித்து போய் சிம்ரன் இவர் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என தேடிக் கொண்டிருப்பார்.

ஆனால் குட்டி தான் விஜய் என்று தெரியாமல் சிம்ரன் பார்க்கும் பொழுதெல்லாம் ரவுடி போல் அவர் கண்களுக்கு தெரிய ஆரம்பிப்பார் அதனால் குட்டியை சிம்ரன் வெறுக்க ஆரம்பிக்கிறார் அதேபோல் ஒரு காலகட்டத்தில் ஒரு ரவுடியை துரத்தி செல்லும் பொழுது ருக்மணி இருக்கும் கல்லூரிக்கு உள்ளே செல்கிறார் அந்த ரவுடி தவறுதலாக ஒரு ஆசிட் பாட்டிலை கீழே போட அப்பொழுது ருக்மணி அவர்களுக்கு கண்கள் பறிபோய் விடுகிறது.

நைட் பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன். ! அதுவும் யாருடன் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

பார்வையற்றவராக இருக்கும் ருக்மணியை குட்டி தான் தோழனாக மாறி அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் பிறகு குட்டியின் தாயார் இறந்ததும் அவரது கண்களை இவருக்கு கண் தானம் செய்கிறார்கள் அதன் பிறகு ருக்மணிக்கு கண்கள் தெரிகிறது.

கண் அறுவை சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுவதால் தன்னுடைய சிறுநீரகத்தை ஒருவருக்கு கொடுக்கிறேன் என வாக்குறுதி கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டு அறுவை சிகிச்சையை சிறப்பாக முடித்து பிறகு வீடு திரும்பும் பொழுது தீவிரவாதியாக குட்டி கைது செய்யப்படுகிறார் அதன் பிறகு நடக்கும் சம்பவம் தான் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதை.

தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட்டை ஏற்படுத்தியது அதேபோல் இன்று வரை இந்த திரைப்படத்தின் பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் 200 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஓடிஸா என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் கொடுத்தது.

கோமதி உங்க அண்ணன் பொண்ணு இங்கதான் இருக்கா கண்டுபிடித்த பாக்கியா.! கதவை சாத்திக்கொண்டு கத்தியை எடுத்த ராஜி..

இயக்குனர் எழில் இந்த திரைப்படத்தின் கதையை முதலில் வடிவேலுவை மனதில் வைத்து தான் எழுதினார் முதலில் இந்த திரைப்படத்தின் கதையை பல ஹீரோக்களிடம் கூறியுள்ளார் எழில் ஆனால் அவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்கள்.

அதன் பிறகு ஆர்.பி சவுத்ரி அவர்களிடம் கதையை கூறியுள்ளார் எழில் அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதால் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் பாசிட்டிவ் ஆக மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார் பிறகு இந்த திரைப்படத்தில் ஆர் பி சவுத்ரி முரளியிடம்  சென்று இந்த திரைப்படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் ஆனால் முரளி இந்த திரைப்படத்தில் நடிக்காமல் மறுத்துள்ளார்.

அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?

ஒரு நல்ல கதையில் முரளி மறுத்து விட்டதால் ஆர்பி சவுத்ரி கோவப்பட்டு உள்ளார் உடனே இந்த கதையை விஜய் அவர்களிடம் கூறியுள்ளார் விஜய்யும் எனக்கு இரண்டு சண்டை காட்சிகள் வேண்டும் என கூற எழில் சிரித்துள்ளார் இதில் சண்டை காட்சிகள் இருக்கு என கூறினார் அதன் பிறகு தான் விஜய் நடித்தார். இப்படி துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது முரளி தான் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.