என்ன அர்ஜுன் கொடுக்கு மொளைச்சிடுச்சா போல தமிழ் வீட்டுக்கே வந்து இப்படி போலந்து கட்ற.! மாப்பிள்ளை விட்ட சவாலில் ஆடிப்போன கோதை குடும்பம்..

Thamizhum saraswathiyum today episode november 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ், கோதை, கார்த்தி, சரஸ்வதி, வசு என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் புது ஆர்டர் பற்றி தமிழ் கூறியதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் ஆனால் வசு அர்ஜுன் ஆர்டரை நாம் தட்டி பறித்து விட்டோம் என கதை விடுவான் ராகினியிடம் தப்பு தப்பாக சொல்லுவான் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதையும் எனக்கும் அது தான் பயமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.

உடனே சரஸ்வதியும் இந்நேரம் ராகினி கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சிருப்பான் என பேச அதற்கு தமிழ், அவன் ஏதாவது சொல்லிட்டு போகட்டும் இந்த ஆர்டர் நமக்கே கிடைக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது தான் கொடுப்பாங்க ஏன்னா அவன் அந்த அளவு சொதப்பி வச்சிருக்கான் என  பேசுகிறார். உடனே அர்ஜுன் தமிழ் வீட்டிற்க்கே வந்து தமிழ் தமிழ் என வாசலை நின்று கொண்டு கத்துகிறார்.

இதுதான் என்னோட தீபாவளி டிரஸ்.! தீபாவளியிலும் இளசுகளை கிறுக்கு பிடிக்க வைத்த தமன்னா.!

வீட்டில் உள்ள அனைவரும் வெளியே வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் என்ன நேரம் பார்த்து பழி வாங்கிட்டீங்க இல்ல வேணும்னே இந்த ஆர்டரை பறிச்சிட்டீங்களே என  புலம்புகிறார் அப்பொழுது தமிழ் நீ நேர்மையா எல்லாத்தையும் முடிச்சிருந்தா இந்த ஆர்டர் எதுக்காக கேன்சல் பண்றாங்க உன் மேல தப்பு இருக்கு அதனால தான் கேன்சல் பண்ணுகிறார்கள் என பேசுகிறார்.

இப்படி நேருக்கு நேரா மோதாம முதுகில் குத்துகிறீர்களே தமிழ் என அர்ஜுன் பேச கோதைக்கு கோவம் வந்து ஏன் புள்ளைக்கு முதுகலை குத்துற பழக்கமே கிடையாது அந்த பழக்கம் எல்லாம் உனக்கு தான் வந்தது, உடனே தமிழ் பிசினஸ் பத்தி பேச படிக்காத உனக்கு பிசினஸ் பத்தி என்ன தெரியும் படிச்சு எனக்கு தான் பிசினஸ் பத்தி எல்லாமே தெரியுமா யாருகிட்ட நீ பேசுற தெரியுமா நான் படிப்புல கோல்ட் மெடல் லிஸ்ட் என அர்ஜுன் பேச கோதைக்கு இன்னும் கோபம் அதிகமாகி அவன் படிக்கவே இல்லனாலும் உன்னை விட அவன் தான் தரத்துல உயரத்துல இருக்கான் நீ படிச்சாலும் கீழ தான் இருக்க.

இதுதான் என்னோட தீபாவளி டிரஸ்.! தீபாவளியிலும் இளசுகளை கிறுக்கு பிடிக்க வைத்த தமன்னா.!

நீ என்னதான் படிச்சிருந்தாலும் குறுக்கு வழியில் தான் பிசினஸ் பண்ணுவ ஆனா என் மகன் நேர்மையான வழியில் பிசினஸ் பண்ணுவான் அதனால தான் அவன் உயரத்துக்கு வரான் என பேசுகிறார்கள். உடனே அர்ஜுன் இந்த ஆர்டரை நான் முடிக்கவும் விட மாட்டேன் இந்த இன்னொரு யூனிட்ட நீங்க பேச போறீங்களா அதையும் உங்களுக்கு கிடைக்காமல் செய்வேன் என சவால் விடுகிறார். ஆக்ரோஷமாக அர்ஜுன் சவால் விட்டதை பார்த்து கோதை குடும்பம் பயப்படுகிறது.

ஆனால் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இந்த மாதிரி சில்லறை புத்தி எல்லாம் நீ தான் செய்வ சில்லறை தனமா தான் யோசிக்கிற என தமிழ் பேசுகிறார். அடுத்த காட்சியில் நடேசன் அந்த அர்ஜுன் நான் இல்லாத நேரம் வந்து கத்திட்டு போயிருக்கானா நான் இருந்திருந்தால் அவனை அடிச்சு தூக்கி வெளில கிடாசியிருப்பேன் என பேசுகிறார் அப்பொழுது பெங்களூர்க்கு தமிழ் கிளம்பி கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சரஸ்வதியும் நானும் வருகிறேன் எனக் கூறுகிறார் தமிழ் பிசினஸ் விஷயமா போறான் உடனே வந்துருவேன் எதுக்காக நீயும் இந்த மாதிரி டயத்துல நீ வரக்கூடாது என பேசுகிறார்.

அந்த இயக்குனர் கண்முன்னே டூ பீஸ் உடையில் நின்னேன்.? அதுக்கப்புறம் தான் படபிடிப்பை எடுத்தார்கள் ரகசியம் உடைக்கும் நயன்தாரா..!

ஆனால் கோதை இரண்டு டிக்கெட்டா போடு நீங்க ரெண்டு பேரும் தனியா போய் எவ்வளவு நாள் ஆகுது என கோதை திட்டவட்டமாக பேசுகிறார் தமிழால் மறுக்க முடியாமல் சரி வா என கூறுகிறார். ஆனால் நமச்சி ஏற்கனவே தமிழுக்கு கல்யாணம் ஆகவில்லை என பொய் சொல்லி வைத்துள்ளார்  இந்த விஷயம் தெரிய வருமா மேகனாவுக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.