மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

thamizhum saraswathiyum january 29 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அடிபட்டு ஹாஸ்பிடல்லில் இருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் எழுந்து வந்து நமச்சியை பார்க்கிறார் என்னை மன்னிச்சிடு நமச்சி என தமிழ் கேட்க நமச்சி நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு தான் அந்த பொய்ய சொன்னன் அதனால இவ்வளவு பெரிய வில்லங்கம் வரும்னு நெனச்சு கூட பாக்கல என்ன மன்னிச்சிடுங்க தமிழ் என பதிலுக்கு நமச்சியும் கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி இடமும் நமச்சி மன்னிப்பு கேட்கிறார்.

சிறிது நேரத்தில் பதறி அடித்து வந்து ராகினி தமிழைப் பார்க்க வருகிறார் தமிழை பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் உடனே அதற்கு நடேசன் உன் புருஷன் தான் எல்லாத்துக்கும் காரணம் உன் புருஷன் தான் இதுக்கு ஐடியா கொடுத்தது என கூறுகிறார் ஆனால் ராகினி அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா காப்பாத்திருப்பாருன்னு சொன்னாரு என பேசுகிறார்.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

வெளியே அர்ஜுன் இருப்பதை பார்த்து சரஸ்வதி கத்துகிறார்  உடனே அனைவரும் வெளியே வருகிறார்கள். என் புருஷனுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உன்ன நான் உசுரோட விட்டு இருக்க மாட்டேன் என சரஸ்வதி அர்ஜனை பார்த்து கூற அதற்கு ராகினி இதையெதான் அம்மாவும் உள்ள சொல்றாங்க நீங்களும் இதையே சொல்றீங்க அவர் மேல எந்த தப்பும் இல்லை நான் தான் தேவையில்லாம உங்கள பாக்க வந்துட்டேன் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மேகனா சாப்பிட உட்காரும்பொழுது மேகனாவின் வேலைக்கார அம்மா உங்க மாமாவையும் அவருடைய மகனையும்  நீ நம்பாதே அவங்க வேணும்னே இது மாதிரி கேம் விளையாண்டு இருக்காங்க தமிழ போட்டு தல முயற்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் எதுக்குன்னு எனக்கு தெரியல ஆனா நீ இனிமே ஜாக்கிறதையா இருக்கணும் என மேகனா விடம் கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் மேகனா உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கலிவரதன்  வருகிறார் ஒரு பைலை கொடுத்து இதனை பைனல் பண்ணுங்க எனக் கூறி விடுகிறார். அதற்கு மேகனா நான் என்ன இதை படித்தே பார்க்கல அதுக்குள்ள எப்படி பைனல் பண்ண முடியும் நான் படிச்சிட்டு சொல்றேன் நீங்க உடனடியா பெங்களூர் கிளம்புங்க நான் இன்னும் இரண்டு நாட்களில் பெங்களூர் வந்து விடுவேன் என கூறுகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டும் வேல ராமமூர்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

அடுத்த காட்சியில் களிவரதன் இவளுக்கு டவுட் வர ஆரம்பிச்சுடுச்சு தமிழ் விஷயத்தில் நாம தான் எல்லாமே என தெரியறது காட்டியும் ஏதாவது செஞ்சாகணும் என அர்ஜுனை வர சொல்லுகிறார் அர்ஜுனிடம் மேகனாவை போட்டு தள்ளுங்கள் எனக் கூறுகிறார் அதற்கு அர்ஜுன் உங்க அக்கா பெண்ணையே போட்டு தள்ள சொல்றீங்க என கேட்க இப்ப மேகனாவ போட்டு தள்ளினா அந்த பழிய சரஸ்வதி மீதுதான் படும் ஏனென்றால் அவர் கழுத்தை நெரிச்சது சிசிடிவி ல ரெக்கார்டு ஆகி இருக்கு எனக் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் எனக்கும் சரஸ்வதிக்கும் பகை இருக்கு அதை இப்படித்தான் தீர்த்துக்கணும் இன்னைக்கு நைட்டு நாங்க முடிச்சிடுவோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஆனால் மேகனா உமா பதியை பார்க்க நேரில் செல்கிறார் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் எக்காரணத்தை கொண்டும் துரோகம் செய்கிற ஆளே கிடையாது தமிழ் அது மாதிரி நடந்துக்கிற ஆளே கிடையாது என தமிழுக்கு சப்போர்ட் செய்கிறார் உமாபதி.

பதுங்கி பாய்ந்த அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

அதுமட்டுமில்லாமல் கலைவரதனிடம் தமிழுக்கு கல்யாணம் ஆனதையும் சரஸ்வதிங்கிறது அவங்க வைஃப் எனவும் குழந்தை பிறக்கப் போகிறது எனவும் அனைத்தையும் சொல்லிவிட்டேனே உங்க கூடவே இருந்துதான் உங்களுக்கு ஏதோ கெடுதல் நினைக்க பாக்குறாங்க நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ எனக் கூற மேகனா உடைந்து போய் எழுந்து செல்ல போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.