பதுங்கி பாய்ந்த அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

arun vijay mission chapter 1 : தமிழ் சினிமாவில் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் முன்னுக்கு வந்தவர் அருண் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அது பெரிதாக சோபிக்கவில்லை.

அதன் பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் அருண் விஜய் தற்பொழுது மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவப்பு ரோஜா படத்தில் கருப்பு பூனையால் வந்த பிரச்சனை.! பல வருடம் கழித்து வெளியாகிய ரகசியம்.

இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் அவர்களுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷ சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிய இந்த திரைப்படம் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த திரையரங்கில் தான் வெளியிடப்பட்டது பிறகு மக்களின் பேராதரவை பெற்றதால் பல திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிஷன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மகாவை அடிக்க கை ஓங்கிய ராஜலட்சுமி.! அடிக்க உரிமை இல்லை என அம்மாவையே எதிர்த்து நிற்கும் சூர்யா..!

கடந்த 12ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் இதுவரை 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.