அடுத்தவார நாமினேஷன் இந்த நான்கு பேரா.? இதோ வெளியான ப்ரொமோ வீடியோ..

biggboss-nomination

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தது என்ன நடக்கும் என நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக நேற்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மெட்கள் தங்கள் வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி கூறுகின்றனர். அப்படிக் கூறும்போது வேல்முருகன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் என கூறும் போது அதனைக் கேட்டதும் அனைவரும் அழுது விடுகின்றனர்.

அவரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி அவருக்கு நடந்த விபத்து பற்றி கூறுகிறார் மிக கொடுமையாக இருந்தது. அது தொடர்ந்து இன்று சற்று முன்பு வெளிவந்த ப்ரமோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் பேசும்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது என தெரிவிக்கிறார். மேலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரேகா, சம்யுக்தா ஆகிய நால்வரும் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்களிப்பின் படி எலிமினேஷன் ஆவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.

இதோ அந்த ப்ரமோ.

பிக் பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரமோ வெளியானது.!! ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மெட்டுகள் வைரலாகும் வீடியோ.

bigboss 2 promo

shivani narayanan targeted by housemates and especially shanamsheddy 2nd promo video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி 14 நட்சத்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட தொடங்கப்பட்டது. இன்று முதலாவது நாள் முதல் எபிசோட் மிகப்பிரம்மாண்டமாக காலையிலேயே மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலோடு குத்தாட்டம் ஆக தொடங்கியது.

இந்நிலையில் முதல் நாளான இன்று தற்போது பிக் பாஸின் இரண்டாவது புரோமோ வெளியானது. இந்த ப்ரமோவில் சீரியல் நடிகை ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்டுக்கள் டார்கெட் செய்வது போன்று காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் கடுமையாக பழகுவது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்கு சனம் ஷெட்டியை விடவே ஃபேன் பாலோவிங் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 3 சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதோடு மட்டுமல்லாமல் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் .இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரமோவை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஷிவானிக்கு என்னதான் நடக்கும் என பார்ப்போம். தற்போது இந்த இரண்டாவது புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங் பாடலோடு தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 முதல் ப்ரமோ வீடியோ!!

Bigg-Boss-Day1-Promo1

vijay tv biggboss season 4 first promo video viral:விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4  முதல் நாள் எபிசோடு இனிதாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களை மேலும் பிரபலபடுத்திக் கொள்வதற்காகவும் மேலும் புதிதாக வருபவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலமாகவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் 4 ல் நடிகர், நடிகை, சீரியல் நடிகை, பாடகர் தொகுப்பாளர்,  தொகுப்பாளினி, சண்டை பயிற்சியாளர், மாடல், செய்திவாசிப்பாளர் என அனைத்து துறையில் இருந்தும் இந்த போட்டிக்கு கலந்து உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று கட்டமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது முதல்கட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் காலையிலேயே வேக்கிங் பாடல் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க அதற்கு போட்டியாளர்கள் உற்சாகமாக குத்தாட்டம் போடுகின்றனர். முதல் நாளிலேயே விஜய் படத்தின் பாடலை போட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆரவ், கவினை தொடர்ந்து திருச்சியிலிருந்து பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகும் மற்றொரு இளம் பிரபலம். !! வைரலாகும் புகைப்படம்.

bigboss new contestant from trichy photo viral:பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3 சீசன் களை கடந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் காதல் மன்னன் ஆரவ் மற்றும் கவின் ஊரிலிருந்து தற்போது புதிதாக ஒரு இளம் பாடகர் ஒருவர் வர இருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே 6 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளார்கள். ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், … Read more