POORNA

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் முன்னணி நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருக்கும் பூர்ணா.! வைரல் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் திருமணத்திற்கு பிறகும் படு கவர்ச்சியாக படங்களில் நடிப்பது உண்டு அதேபோல் தற்பொழுது பிரபல நடிகை பூர்ணா முன்னணி நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கும் நிலையில் அது குறித்த பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி இவர் தமிழில் முனியாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தர இந்த படத்தினை தொடர்ந்து விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, தலைவி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார் இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் பூர்ணா மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு துபாய் தொழில் அதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்த பூர்ணா ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கத்தில் Devil என்ற படத்தில் நடிகர் வித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்திருக்கும் நிலையில் இதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான கலவி பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார் அந்த பாடலில் நடிகர் வித்தாரத்துடன் பூர்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படியா என கூறி வருகிறார்கள்.