போட்டியாளரின் கன்னத்தை பிடித்து கடித்த நடிகை பூர்ணா.! இப்படி ஒரு முத்தம்மா வைரலாகும் வீடியோ.!

பொதுவாக சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் உள்ளே வருகிறார்கள். ஆனால் அனைவரும் வெற்றி பெறுகிறார்களா என்றால் கிடையாது. ஒருவர் முன்னேறிச் செல்வதற்கு நேரம் எவ்வளவு முக்கியமோ அப்படி தான் இந்த சினிமா வாழ்க்கையும்.

ஒரு சில நடிகைகள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு உயரத்தை அடைவார்கள் அதேபோல் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அந்த வகையில் நடிகை பூர்ணா ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இவரை முதன் முதலில் குட்டி அசின் என்று தான் பலரும் அழைத்தார்கள்.

இவர் 2008 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் வெளியாகிய விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பரத், வடிவேலு மற்றும் பொன்வண்ணன் ஆகியோர்கள் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்கள் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பூர்ணா.

மேலும் பூர்ணா தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை பல நடிகைகளும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதாவது சசிகுமார் நடிப்பில் வெளியாகிய கொடி வீரன் திரைப்படத்தில் வில்லனுக்கு மனைவியாக மொட்டையடித்துக் கொண்டு நடித்திருந்தார்.

நடிகைகள் பலரும் இது போல் செய்ய தயங்குவார்கள் ஆனால் இவர் மிகவும் தைரியமாக கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியில் முடிந்தது இந்த நிலையில் ஒருசில ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் நடிகை பூர்ணா. தெலுங்கில் ஒரு நிகழ்ச்சியில் அதாவது தீ ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு இளைஞர் மிகவும் அற்புதமாக நடனமாடி உள்ளதால் அந்த இளைஞருக்கு கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

முத்தம் மட்டும் கொடுக்கவில்லை அவரது கன்னத்தையும் கடித்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நடுவர் செய்கிற வேலையா இது என பலரும் கூறி வருகிறார்கள் பூர்ணா கடைசியாக ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment