வெள்ளித்திரை ஜோடிகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் வருகிறதோ அதேபோல் சின்னத்திரை ஜோடிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனிமவுசு உருவாகியுள்ளது. சொல்லப்போனால் நட்சத்திர ஜோடிகளை விட சின்னத்திரை ஜோடிகளுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்து வருகிறது இவர்களை தொடர்ந்து நாள்தோறும் சீரியல்களில் பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் சிறந்த ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சஞ்சீவ், அலியா மானசா. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே காதலித்து பிறகு தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு அழகான குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களுடைய புகைப்படங்களையும் அவ்வப்பொழுது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர்கள் கொரோனா பிரச்சனையின் காரணமாக வீட்டில் இருக்கும் பொழுது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்கள்.
அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில் பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து அலியா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த நிலையில் பிறகு இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
மேலும் குழந்தை பிறந்த பிறகு ரீ என்ட்ரி கொடுத்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிப்பதிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட சஞ்சீவ், அலியா மானசா தங்களுடைய குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளனர் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.