பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு நடிகர் சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ காணொளியை பார்த்தீர்களா.!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ் இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக மக்களிடையே ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கூடிய சீக்கிரம் அவர் சிகிச்சை முடிந்த பின்பு பிக்பாஸ் வீட்டிற்குள் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசன் இருக்க வேண்டிய இடத்தில் தற்பொழுது எந்த பிரபலத்தை இறக்குவார்கள் என்பது தெரியவில்லை இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சின்னத்திரை நடிகர்,தொகுப்பாளருமான சஞ்சீவ் மற்றும் வெங்கட் இருவரும் இணைந்துள்ளார்கள்.

தற்பொழுது சஞ்சீவ் மற்றும் வெங்கட் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் சஞ்சீவ் நான் எப்படி இங்கு இருக்கிறேனோ அதே போல் தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இருப்பேன் சண்டை வந்தால் சண்டை போடுவேன்.

என்று கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளி தற்போது மக்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருவதால் பலரும் இதனை இணையத்தில் வைரலாக்கி சஞ்சீவ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கவனித்தீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment