விஜய் டிவியால் ஆறு மாத காலம் சஞ்சீவிடம் பேசாமல் இருந்த விஜய்.! காரணம் என்ன தெரியுமா.?

sanjeev
sanjeev

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் நடிகர் விஜய் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக காலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை கண்ட நிலையில் இதனை அடுத்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் இணைய உள்ளார்.

இவ்வாறு டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்கு நண்பர்கள் வட்டாரம் மிகக் குறைவானது அவரது கல்லூரி கால நண்பர்கள் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நீண்ட கால நண்பராக இருந்த வருபவர் தான் சஞ்சீவ். விஜய், சஞ்சீவ் வீடு பக்கத்து பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி விஜய் சஞ்சீவை பார்ப்பதற்காக செல்வது வழக்கம்.

இவ்வாறு மிக நெருங்கிய நண்பர்களாக விஜய்-சஞ்சீவி இருந்து வரும் நிலையில் நடிகர் விஜய் சஞ்சீவிடம் கோபப்பட்டு ஒருமுறை சண்டை போட்டதோடு மட்டுமல்லாமல் ஆறு மாத காலம் வரை பேசாமல் இருந்து வந்தாராம். அதற்கு விஜய் டிவி சேனல் தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது விஜய்யின் நண்பர்கள் எல்லோரும் பங்குபெற்ற ஒரு ஷோ நடத்தப்பட்டதாம் ஆனால் அந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் மட்டும் கலந்து கொள்ளவில்லையாம். அவர் திருமதி செல்வம் ஷூட்டிங்கில் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என கூறிவிட்டாராம். இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்ட விஜய் சஞ்சீவிடம் ஆறு மாசத்திற்கு பேசவே இல்லையாம்.