RJ-balaji

ஜீ தமிழ் டாப் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ள RJ பாலாஜி.! வைரலாகும் ப்ரோமோ..

தொகுப்பாளராக சின்னத்திரையின் தனது வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு வெள்ளித்திரையில் பிரபலமடைந்து வரும் ஏராளமான நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள்.  அந்த வகையில் மிகவும் முக்கியமான ஒரு நடிகர்தான் RJ பாலாஜி.  இவர் பிரபல Radio தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஹீரோவாகவும், இயக்குனராகவும் வளர்ந்தார்.  முக்கியமாக நானும் ரவுடிதான் LKG திரைப்படத்தில் ஹீரோவாக இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து RJ பாலாஜி நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் திரையரங்குகள் மூடியிருந்த நிலையில் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை RJ பாலாஜி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர் நடித்துவரும் அடுத்த திரைப்படமான வீட்ல விசேஷம் திரைப்படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் RJ பாலாஜி மற்றும் NJ சரவணன் நினைந்து இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் ஹிந்தி திரைப்படமான பதாய் ஹோ என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.  இத்திரைப்படத்தில் அபர்ணா முரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.  இவர்களைத் தொடர்ந்து சத்யராஜ்,ஊர்வசி, மறைந்த நடிகை KPAC லலிதா உள்ளிட்டவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.  மேலும் சமீபத்தில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது தற்போது இப்படத்தின் பிரமோஷனுக்காக ஜீ தமிழ் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் ஸ்பெஷல் என்ட்ரியாக வந்துள்ளார்.  தற்போது அந்த ப்ரோமோவை ஜீதமிழ் வெளியிட்டுள்ளது.

https://youtu.be/QIlhaiNHLS4

nayanthara

லேடி சூப்பர் ஸ்டாரின் அந்த படம் அட்ட காப்பி தான்.! ஜாலியாக பேசி உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்.! வைரலாகும் வீடியோ

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சொல்லபோனால் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான். நடிகை நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதிலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா சமீபகாலமாக  சோலோ ஹீரோயினாகமற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் நல்ல கதை இருந்தால் காமெடி நடிகர்களின் படத்தில்கூட நடிப்பதற்கு ரெடி என்று ஓகே சொல்லி விடுகிறாராம் அப்படி நயன்தாரா ஓகே சொல்லிய திரைப்படம் கோலமாவு கோகிலா.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு அவர்களுடன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்குனராக களம் இறங்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் அம்மன் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் முதலில் நயன்தாராவை அம்மன் வேடத்தில் பார்ப்பதற்கு பலரும் விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் படம் வெளியாகி படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியாகிய பிகே படத்தின் காப்பி என பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த சூழ்நிலையில் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு நேர்காணலில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிகே படத்தில் கொஞ்சம் சுட்டு எடுத்தது தான் அது மட்டுமில்லாமல் என் குடும்ப கதையையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்தோம் என வெளிப்படையாக கூறிவிட்டார்.

pk
pk

இந்த படத்தை பார்த்தாலே தெரியும் என ஆர் ஜே பாலாஜி மிகவும் ஹானஸ்டா ஒப்புக்கொண்டார். இதோ அவரின் நேர்காணல் வீடியோ.