ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படத்தில் இணைந்த முன்னணி நடிகை.! இயக்குனர் யார் தெரியுமா.?

0
rj balaji
rj balaji

தன்னுடைய பேச்சுத் திறமையினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருபவர் தான் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் நடிப்பில் கடைசியாக வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பினை தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் சில திரைப்படங்கள் இயக்குவதிலும் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அதாவது ரேடியோ சாகியாக பணியாற்றி வந்த இவர் பிறகு தமிழ் திரைவுலகில் வெளியான பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். இதனை அடுத்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் ஹீரோவாகவும்’இயக்குனராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

detector
kogul

மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் பெரிய வெற்றியை பெற்றது, இதனை அடுத்து வீட்ல விசேஷம் திரைப்படத்தினை இவர் இயக்கியிருந்த நிலையில் இப்படம் ஹிட்டானது.இப்படிப்பட்ட நிலையில் ஆர்ஜே பாலாஜி தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகி உள்ளார் அவருடைய படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

rk-balaji
rk-balaji

மேலும் கோகுல் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஷிவானி ராஜசேகர் இதற்கு முன்பு கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.