மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்.! ஓப்பனாக பேசிய ஆர் ஜே பாலாஜி.!

0

R.J.Balaji said about mukuthi amman 2 : தீபாவளியை முன்னிட்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை என் .ஜே. சரவணன் மற்றும் ஆர் ஜே பாலாஜி துணையிருந்து இயக்கிய படமாக அமைகிறது .

இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி,மௌலி போன்ற பல நட்சத்திரங்களுடன் நயன்தாரா நடித்து இருப்பார்.

மேலும் ஹாட்ஸ்டார் OTT பேஸ் புக் பக்கத்தில் ரசிகர்கள் ஆர் ஜே பாலாஜி விடம் கேள்வி எழுப்பும் போது அவரும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறியிருந்தார்.

அந்தக் கேள்விகளில் ஒரு ரசிகர் மூக்குத்தி அம்மன் இரண்டு எடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆர்ஜி பாலாஜியை பார்த்து கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்ஜே பாலாஜி சினிமா ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் இரண்டாம் பாகம் கண்டிப்பாக இயக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 25ஆம், 26 ஆம் பாகம் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.