rashmika

தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் மட்டுமே வெளியாகிறது.! ஆனால் பாலிவுட் அப்படி கிடையாது என பேசி சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தானா..

கன்னட சினிமாவின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்த நிலையில் தற்போது தொடர்ந்த அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவிலும் கவர்ந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இதனை அடுத்து புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் இந்த படமும் இதற்கு புகழை பெற்று தந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய்வுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது இவருக்கு தமிழில் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாலிவுட்டில் பாலிவுட் முன்னணி நடிகர் சித்தார்த் மல்ஹாத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி அன்று தெளிவாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா பேசிய பொழுது தென்னிந்திய சினிமாவில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் பாடல்கள் மட்டுமே அதிக அளவில் வெளியாகிறது ஆனால் பாலிவுட்டில் மட்டும் தான் மெலடி மற்றும் ரொமாண்டிக் பாடல்கள் வெளியாகின்றது இதுதான் என்னுடைய பாலிவுட் ரொமான்டிக் சாங் என்று கூறியுள்ளார் இதனை கேள்விப்பட்ட தென்னிந்திய ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அவர் நடித்திருக்கும் ரொமாண்டிக் பாடல்களையும் வெளியிட்டு கழுவி ஊற்றி வருகிறார்கள்.