மெர்சல் பட சாதனையை முறியடித்த விஜயின் வாரிசு.! தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா.?

0
vijay-
vijay-

தளபதி விஜய் அண்மைக்காலமாக தொடர்ந்து ஆக்சன் படங்களை கொடுத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆனால் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஒரு பக்கம் குடும்பம் சென்டிமென்ட் என இருந்தாலும் ஆக்சன் காமெடி போன்ற அனைத்தும் நிறைந்த படமாக உருவாகியது.

வாரிசு கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் செம ஸ்மார்ட்டாக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, பிரபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, ஷாம் யோகி பாபு போன்ற பல நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளது. தளபதி விஜயின் படம் சோலோவாக வெளிவந்தால் எதிர்பாராத அளவு வசூலை ஈட்டும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த முறை வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துடன் சேர்ந்த மோதியதால் வசூல் சற்று குறைந்துள்ளது.

இருந்தாலும் இரண்டு படங்களின் வசனம் சமமாக தான் உள்ளது என கூறப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் இந்த படத்தின் வசூல் குறைந்தாலும் நாட்கள் செல்ல செல்ல வாரிசு பணத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே வருகின்றன  அதன்படி இதுவரை இந்த படம் தமிழகத்தில் 110 கோடிக்கு மேல் அள்ளி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் உலக அளவில் வாரிசு படம் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இதன் மூலம் விஜயின் மெர்சல் படம் உலக அளவில் ஆன வசூல் சாதனையை வாரிசு படம் முறியடித்துள்ளது. இதன் மூலம் விஜயின் நான்கு படங்கள் 250 கோடி வசூல் செய்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வாரிசு இதுவரை 750 கோடி வசூல் செய்திருந்தாலும் இன்னும் 25 கோடி வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் லாபம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.