rajinikanth

ரஜினி ஒழிக என கத்திய விஜய் ரசிகர்கள்.. தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்.! வைரல் வீடியோ

Jailer Movie: சென்னையில் வெற்றி திரையரங்கில் ரஜினியின் ஜெய்லர் படத்தினை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி காக்கா, கழுகு ஆகியவற்றை வைத்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வைரலானது. மேலும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இவர் இந்த சர்ச்சைகளுக்கு இடையே இன்று ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்சை ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்குகளிலும் 9:00 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக சில விஜய் ரசிகர்கள் வந்தார் வந்திருந்தனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என சத்தம் போட்டதால் இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகர்களை பிடித்து அடி வெளுத்து எடுத்துள்ளார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய்யின் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் துரத்தி பிடித்து தியேட்டரின் வாசலில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள். இவ்வாறு விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நெல்சனுக்கு கிடைத்த மாதிரி மனைவி கிடைக்க வேண்டும்.. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவால் பிரபலமான நெல்சனின் மனைவி.! வைரல் மீம்ஸ்கள்

Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நெல்சன் திலீப்குமார். இவர் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் டைரக்டராக பணியாற்றி வந்த நிலையில் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார். முதன்முறையாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை எடுத்திருந்தார்.

ஆனால் இந்த படம் சில காரணங்களினால் பாதியிலேயே கைவிடப்பட்டது. பிறகு நயன்தாராவை வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் இயக்கியதன் மூலம் மாபெரும் வெற்றினை கண்டது. இந்த படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய டாக்டர் படமும் மாபெரும் வெற்றியை படைத்தது.

கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினி வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ரஜினி, நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார் எனக்கு கதை பிடித்திருந்தது பின்னர் அவர் பீஸ்ட் சூட்டிங் முடித்து பத்து நாட்களில் விரிவாக கதை சொல்வதாக சொன்னார் பத்து நாளைக்கு பின் பீஸ்ட் சூட் முடித்து வந்து கதையை சொன்னார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது ப்ரோமோ சூட் செய்து படத்தை அறிவித்தோம் அதற்கு பிறகுதான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் படம் சரியாக போகவில்லை இயக்குனரை மாற்ற வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள்

நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம் பீஸ்ட் விமர்சனங்கள் மோசமாக இருந்தது உண்மைதான் ஆனால் வசூல் நஷ்டம் இல்லை பாக்ஸ் ஆபிஸில் நன்றாகத் தான் இருந்தது என்றெல்லாம் கூறினார்கள். இவ்வாறு இந்த விழாவில் ரஜினி நெல்சனை பற்றி பேசிய பொழுதெல்லாம் நெல்சன் பின்னால் அமர்ந்திருந்த பெண் பெருமை கொண்ட முகத்துடன் அடிக்கடி கைதட்டி கொண்டாடியிருந்தார்.

JAILER 1
JAILER 1

அது குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில் அது நெல்சனின் மனைவி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த விழாவில் ரஜினி எப்போதும் ஒரு இயக்குனர் தோற்பது இல்லை அவர் எடுக்கும் சப்ஜெக்ட் தான் தோற்கும் என்று சொன்னார் அப்பொழுது நெல்சன் பின்னால் இருந்த அவருடைய மனைவி கொடுத்த ரியாக்ஷ்ன் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..