வெளிநாட்டில் ஃப்ரீ புக்கிங் வசூலை குவிக்கும் ஜெயிலர்.. எத்தனை கோடி தெரியுமா?

Jailer Movie: நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காண்பித்து வருகிறது. மேலும் டிக்கட் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் மூன்று பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. இதன் மூலம் ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் ஜெயிலராக நடித்துள்ளார்.

இதில் அதிரடியான சண்டை காட்சிகளும் இடம் இடம் பெற்று இருப்பதால் நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி வருகிறது தற்பொழுது ப்ரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இது குறித்த போஸ்டர்களையும் பட குழு வெளியிட்டு வருகின்றனர். ஃப்ரீ புக்கிங் உலக அளவில் பட்டையை வருகிறது.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வரை ஃப்ரீ புக்கிங்கில் உலகளவில் ரூபாய் 12 கோடி வரை ஜெயிலர் படம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் நாள் ஃப்ரீ புக்கிங் மட்டுமே ரூபாய் 35 கோடிக்கு மேல் உலகளவில் சாதனை படைத்துள்ள நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment