கே.ஜி.எஃப் 2 பட சாதனையை முறியடித்த ரஜினியின் ஜெயிலர்.. எங்கு தெரியுமா.?

Jailer movie: தமிழகத்தில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதோ அதை விடவும் அதிகமாக மற்ற மொழி திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படம் தான் கே.ஜி.எஃப் 2. இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.

எனவே இது செய்த சில சாதனைகளை வேறு எந்த திரைப்படங்களாலும் செய்ய முடியாமல் இருந்து வந்த நிலையில் அதனை தற்பொழுது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் முறியடித்து இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தற்போது பட குழு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அப்படி ஃப்ரீ புக்கிங் நடத்தி வரும் நிலையில் இதிலேயே ஏராளமான கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் குறிப்பாக பெங்களூரில் அந்த காலத்திலிருந்து சென்னையை விடவும் அதிக தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வருவதனால் கன்னட திரைப்படங்களை விட தமிழ் திரைப்படங்களை பார்க்க பலரும் விரும்பி வருகின்றனர்.

அதுவும் முக்கியமாக ரஜினி படம் என்றால் தனி வரவேற்பு உண்டு அப்படி ரஜினிகாந்த் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் இவருடைய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

அப்படி பெங்களூர் பகுதியில் மட்டும் இந்த படம் 1090 காட்சிகள் திரையிட உள்ளதாம் இதற்கு முன்பு கேஜிஎப் 2 படத்திற்கு 1037 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் இதனை விடவும் அதிகமாக பெற்று ஜெயிலர் திரைப்படம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. ரஜினியின் ஜெயிலர் படம் காலை 6 மணிக்கு பெங்களூரில் சிறப்பு காட்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment