bb4-3rd-promo-nisha

வெளிவந்த மூன்றாவது ப்ரமோ!! பிக்பாஸ் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்!! கதறி அழும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ.

biggboss 8th day 3rd promo aranthangi nisha and other housemates crying video: விஜய் டிவியில் ரசிகர்களால் பெருமளவில் தற்போது விரும்பி பார்க்க படுவது பிக் பாஸ் சீசன் போர், எட்டாவது நாள் விறுவிறுப்பாக போய்க் கண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் முதல் ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு  சனம் ஷெட்டி,  ஷிவானி நாராயணன், சம்யுக்தா மற்றும் அஜித் போன்றோரை நாமினேட் செய்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ சிவானி நாராயணனுக்கு தற்போது ஆர்மி ஆரம்பித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது நாமினேட் ஆனது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அவர் வெளியாக மாட்டார் என அவர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. காரணம் இவர் இதுவரை இந்த வீட்டில் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடவில்லை என்பதே. இதனைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியாகியது. இந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ரியோவும் சண்டை போடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா கதறி அழுகிறார். அதுமட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அவர் தனது குழந்தையுடன் பேசுகிறார். அவர் குழந்தை அப்போது அழுகிறது இதற்காக வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ் மேட்களும் அழகின்றனர்.

தற்போது அந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

biggboss4-9

2 promo!! எலிமினேஷனில் சிக்கிய ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன்!! இதோ வீடியோ.

today biggboss 4, 2 promo elimination list video viral:பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரமோவில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தங்க தகுதி இல்லாத அடுத்த நாலு பேர் யார் என பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அனைவரும் கலந்து ஆலோசித்து பின்னர் சம்யுக்தா வந்து அஜித், சிவானி நாராயணன்,  ரம்யா பாண்டியன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரின் வாழ்க்கையில் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் போல் இல்லை என அவர் கூறுகிறார்.

அவர் கூறியதற்கு பின் நடிகர் சுரேஷ் அவர் கூறியது ஏற்றுக்கொண்டார். மற்றவர்களின் முகம் சோர்ந்து போய் உள்ளது குறிப்பாக சிவானி நாராயணனின் முகம் மிகவும் சோகத்தில் இருந்தது.

சிவானி நாராயணனுக்கு என ரசிகர்கள் அதிகமாகவே உள்ளன. இவர் தினமும் மாலை நேரத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்துகொண்டு எந்த ஒரு பர்ஃபார்மன்சும் செய்யாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர்.

anitha-sampath1

செய்தி வாசிப்பாளராக இல்லாமல் சீரியலில் நடித்திருக்கலாம் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

instead of newsreader anitha sampath would be serial actress video viral:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரமோ ஒரு நாளைக்கு மூன்று நான்கு என வந்த வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக அனிதா சம்பத்தே ப்ரமோவில் இடம் படித்து வருகிறார். தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொள்வதற்காக அவர் தானே போய் வம்பு வளர்த்துகிறாரா எனவும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் அனிதா சம்பத் இதற்கு முன் இருந்த போட்டியாளர்களை காப்பியடித்து அவர்களைப் போலவே செயல்படுகிறார் எனவும் கூறுகின்றனர். சனம் ஷெட்டி தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை இயல்பாக எடுத்துக்கண்டு எப்போதும் போல சாதாரணமாக இருக்கிறார்.

ஆனால் அனிதா சம்பத் சின்ன ஒரு விஷயத்தையும் பெரிதாக்கி வீட்டில் பிரச்சினையை தூண்டி கொண்டு வருகிறார். இவருக்கு சனம் ஷெட்டி எவ்வளவோ பரவாயில்லை என கம்பேர் பண்ணும் அளவுக்கு அனிதா சம்பத் தற்போது நடந்து கொண்டிருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அனிதா சம்பத்தை நீங்கள் நியூஸ் ரீடரா ஆகுறதுக்கு பதிலா சீரியலில் நடித்து இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பெரியவரான சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வாயை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நீ எங்கேயோ போய் இருக்குவம்மா என கூறுகின்றனர்.

மேலும் எச்சில் சண்டை, எரும மாட்டு பிரச்சினை என சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா தான் வேண்டுமென்றே வம்புக்கு போனார் எனவும் அனிதா சம்பத்தை ரசிகர்கள் தாக்குகின்றனர்.

biggboss-4-anitha-sambath

கதறி கதறி அழும் அனிதா சம்பத்.! காரணம் அறந்தாங்கி நிஷாவா.? வைரலாகும் வீடியோ

bigboss day 2 anitha sambath crying to nisha 2 nd promo video viral: இன்றைய பிக்பாஸிலன் இரண்டாம் கட்ட ப்ரமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரமோவில் பிரபல செய்தி வாசிப்பாளரான இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத் கண்ணீர் விட்டு பேசும் புதிய பிரமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல் உள்ளார் என் அம்மாவும் கருப்பாக தன் இருப்பாங்க. இதனாலேயே அவங்க நகை எதுவும் போட மாட்டாங்க. போட்டா இன்னும் அவங்க கருப்பா இருப்பாங்க அப்படி இருப்பதாலேயே நகை போடுவது இல்லை.

எங்க அம்மா நிஷா அக்கா கிட்டருந்து கத்துக்கணும். அவங்க கருப்பா இருக்குறதால ரொம்ப இன்பிரியரா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால் நிஷா அக்கா அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப போல்ட்  சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்காங்க அதனாலேயே  அவங்களை எனக்கு பிடிக்கும் எனக்கூறி அழுதுகொண்டே பேசியுள்ளார்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.

nisha

3வது ப்ரமோ வெளியானது!! அறந்தாங்கி நிஷாவுக்கு என்ன ஆயிற்று!! வைரலாகும் வீடியோ.

3rd promo video: இன்று பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் வெற்றிகரமாக 14 நாட்கள் ஹோட்டல் அறையில் தனித்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று ரிசல்ட் எடுக்கப்பட்டு பிறகு 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

காலையிலேயே முதல் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. முதல் பிரமோவில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர்-நடிகைகள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் பாத்ரூமில் ஜாலியாக டான்ஸ் ஆடினார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் தான் இந்த வருடத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு ரம்யா பாண்டியன் டான்ஸ் ஆடும்போது பிளையிங் கிஸ் கொடுத்தார். எனவே அதற்காக ரசிகர்கள் இவருக்கு சீக்கிரமாக ஆர்மி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரோம் ஒன்று வெளியானது. இந்தப் ப்ரமோவில் சிவானி நாராயணனை வீட்டிலுள்ளவர்கள் டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சனம் ஷெட்டி, சிவானி நாராயணனை பார்த்து உங்களுக்கு இங்க இருக்க எந்த தகுதியும் இல்லை என கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தடுக்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அவரைப் பார்த்து ரியோ சிரிப்பது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

bigboss girls

இவங்க டான்ஸ் தான் சூப்பர்!! இவங்களுக்கு தான் ஆர்மி தொடங்கணும்!! வைரலாகும் வீடியோ.

biggboss season 4 fans  started discussing about army on considering their dance video: பிக்பாஸ் முதல் ப்ரமோ மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலோடு வெளிவந்து அதில் டான்ஸ் ஆடியவர்களில் யாருடைய டான்ஸ் நன்றாக இருக்கிறது என்று அதற்குள் போட்டி ஆரம்பித்து விட்டது.

சமூக வளைதளத்தில் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் என போட்டி ஆரம்பித்து விட்டது. சிலர் ஷிவானிக்கு கமெண்ட் செய்கின்றனர், சிலர் கேப்ரில்லா விற்கு என கமெண்ட் செய்கின்றனர் மேலும் சிலர் ரம்யா பாண்டியனுக்கு என கமெண்ட் செய்கின்றனர்.

சிலர் புரோமோ வெளியாகி ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள்ளேயே ஆர்மியா என கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ விஜய் டிவி ஆவலுடன் எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங் முன்னுக்கு வருவது என்பது இந்த பிக்பாஸ் வைத்து நடந்துவிட்டது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது முதலிடத்தில் இருப்பது கேப்ரியலா என பேசப்படுகிறது. அவர்தான் மெட்டுக்கு ஏற்ப சரியாக டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் 2 k எனவும் பேசப்பட்டு விரைவில் இவருக்கு தான் ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த ப்ரமோவில் ரியோவும் அறந்தாங்கி நிஷாவும் பாத்ரூமில் டான்ஸ் ஆடுகின்றார்கள். எனவே இவர்கள்தான் இந்த சீசனில் மக்களை சிரிக்க வைப்பார்கள் போல தெரிகிறது எனவும் கூறுகின்றனர். தற்போது இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

bigboss 2 promo

பிக் பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரமோ வெளியானது.!! ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மெட்டுகள் வைரலாகும் வீடியோ.

shivani narayanan targeted by housemates and especially shanamsheddy 2nd promo video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி 14 நட்சத்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட தொடங்கப்பட்டது. இன்று முதலாவது நாள் முதல் எபிசோட் மிகப்பிரம்மாண்டமாக காலையிலேயே மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலோடு குத்தாட்டம் ஆக தொடங்கியது.

இந்நிலையில் முதல் நாளான இன்று தற்போது பிக் பாஸின் இரண்டாவது புரோமோ வெளியானது. இந்த ப்ரமோவில் சீரியல் நடிகை ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்டுக்கள் டார்கெட் செய்வது போன்று காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் கடுமையாக பழகுவது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்கு சனம் ஷெட்டியை விடவே ஃபேன் பாலோவிங் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 3 சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதோடு மட்டுமல்லாமல் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் .இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரமோவை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஷிவானிக்கு என்னதான் நடக்கும் என பார்ப்போம். தற்போது இந்த இரண்டாவது புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.