செய்தி வாசிப்பாளராக இல்லாமல் சீரியலில் நடித்திருக்கலாம் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

0

instead of newsreader anitha sampath would be serial actress video viral:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரமோ ஒரு நாளைக்கு மூன்று நான்கு என வந்த வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக அனிதா சம்பத்தே ப்ரமோவில் இடம் படித்து வருகிறார். தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொள்வதற்காக அவர் தானே போய் வம்பு வளர்த்துகிறாரா எனவும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் அனிதா சம்பத் இதற்கு முன் இருந்த போட்டியாளர்களை காப்பியடித்து அவர்களைப் போலவே செயல்படுகிறார் எனவும் கூறுகின்றனர். சனம் ஷெட்டி தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை இயல்பாக எடுத்துக்கண்டு எப்போதும் போல சாதாரணமாக இருக்கிறார்.

ஆனால் அனிதா சம்பத் சின்ன ஒரு விஷயத்தையும் பெரிதாக்கி வீட்டில் பிரச்சினையை தூண்டி கொண்டு வருகிறார். இவருக்கு சனம் ஷெட்டி எவ்வளவோ பரவாயில்லை என கம்பேர் பண்ணும் அளவுக்கு அனிதா சம்பத் தற்போது நடந்து கொண்டிருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அனிதா சம்பத்தை நீங்கள் நியூஸ் ரீடரா ஆகுறதுக்கு பதிலா சீரியலில் நடித்து இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பெரியவரான சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வாயை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நீ எங்கேயோ போய் இருக்குவம்மா என கூறுகின்றனர்.

மேலும் எச்சில் சண்டை, எரும மாட்டு பிரச்சினை என சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா தான் வேண்டுமென்றே வம்புக்கு போனார் எனவும் அனிதா சம்பத்தை ரசிகர்கள் தாக்குகின்றனர்.