விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தனம் தனக்கு ஏற்பட்ட நோயை வீட்டில் இருப்பவர்களிடம் கூறாமல் மற்ற தனது கடமைகளை செய்து வருகிறார் மேலும் மீனாவும் இதனை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் கூறக்கூடாது என்பதற்காக சத்தியமாக உள்ளார்.
இவ்வாறு நாளுக்கு நாள் மீனா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விடலாம் என கூறியும் அதனை கேட்காமல் தனம் இருந்து வருகிறார். இவ்வாறு இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கண்ணனும் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கிறார் எனவே இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கண்ணன் முன்பு வாங்கிய லஞ்சத்தை தெரிந்துக் கொண்ட மேல் அதிகாரி எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக திட்டம் போட்டு மாட்டி கொடுத்துள்ளார். எனவே இந்த வாரம் எப்படி கண்ணன் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர போகிறார் இதற்காக அண்ணன் தம்பிகள் எப்படி உதவ இருக்கிறார்கள் என்பதை வைத்து கதைக்கலம் நகர இருக்கிறது.
இவ்வாறு இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா இவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி இருக்கும் நிலையில் அந்த வீட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்த வீடு கட்டிக் கொண்டிருக்கும் பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது மிகவும் சிம்பிளாக அவருடைய வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கிறார்.
அது குறித்த வீடியோவை ஹேமா சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹேமாவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர் அதோட மட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அவ்வளவு அழகாக வீடு கட்டி உள்ளார்.