மச்சானுடன் மலேசியா பறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா.! வைரல் புகைப்படம்..

Pandiyan stores Hema: சமீப காலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. அதேபோல் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து புதிய சீரியல்களில் ஏராளமான இளம் நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி பல ஹிட்டான சீரியல்களை கொடுத்து வரும் நிலையில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து உருவான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்பொழுது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

நாயகன் படத்தில் கமலின் குழந்தையாக நடித்தது இந்த பிரபல நடிகையா? அட இது தெரியாம போச்சே..

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி என்று கேரக்டரில் நடித்த ஸ்டாலின் மற்றும் மீனா என்ற கேரக்டரில் நடித்த ஹேமா இருவரும் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தொடரில் நடித்து வருகின்றனர். இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஹேமா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

hema
hema

அப்படி இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மச்சானுடன் மலேசியா சென்றுள்ளதாக கூறியுள்ளார் அந்த புகைப்படத்தில் ப்ரீனா மற்றும் ஹேமா இருவரும் உள்ளனர். ஈவண்டுக்காக இருவரும் ஒன்றாக மலேசியா சென்றுள்ளனர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

hema 1
hema 1

நடிகை ப்ரீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடைந்த பிறகு இந்த சீரியலின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.