நாயகன் படத்தில் கமலின் குழந்தையாக நடித்தது இந்த பிரபல நடிகையா? அட இது தெரியாம போச்சே..

Kamal Haasan: தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துவரும் கமல்ஹாசன் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மொத்த ரசிகர்களையும் கவர்ந்த கமல் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராக, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வரும் கமல்ஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்

மேலும் மணிரத்தினம் இயக்கத்திலும் இணைந்துள்ளார். இவ்வாறு தன்னுடைய திரைப்பயணத்தில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கும் கமல்ஹாசன் நாயகன் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இப்படம் 1987ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியானது இப்படத்தில் சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

‘இதயத்தை திருடாதே’ பட நடிகையா இவர்.! 30 வருடங்களுக்குப் பிறகு கம்பேக்..

மும்பை தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதோடு மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. இவ்வாறு நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம், கமல்ஹாசன் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

nayakan movie
nayakan movie

எனவே இப்படத்திற்காக ரசிகர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். நாயகன் படத்தில் கமல்ஹாசன் சரண்யாவுக்கு குழந்தையாக சாரா என்ற கதாபாத்திரம் அமைந்திருக்கும் அந்த குழந்தை நடித்திருக்கும் பிரபலம் யார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

nayakan movie
nayakan movie

அதாவது மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையான வினோதினி தான் அந்த குழந்தை. பிரசாந்த் நடிப்பில் வந்த வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது