கார்த்தியின் ஜப்பான் முழு திரை விமர்சனம்.!

Japan Movie Review : கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் சீரிஸ் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஏனென்றால் கார்த்தியின் 25 -வது திரைப்படம் மேலும் இந்த படத்தில் அவருடைய லுக் வேறுவிதமாக காண்பிக்கப்பட்டதும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இம்மானுவேல், சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ், கே எஸ் ரவிக்குமார் என பலர் நடித்துள்ளனர். பல தடைகளைத் தாண்டி ஜப்பான் திரைப்படம் இன்று உலகம் எங்கும் கோலாகலமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை என்னவென்றால்.. கார்த்தி தன் தாயே காப்பாற்ற சின்ன வயதில் சின்ன சின்ன திருட்டு வேலை பார்க்கிறார்.

ஐஷூ விவகாரத்தில் சிக்கிய நிக்சன்.! உண்மைகளை வைத்து மிரட்டும் மணி.. விஷ்ணுவின் முடிவு என்ன?

ஒரு கட்டத்தில் பெரிய திருடனாக பலரது மத்தியிலும் பேசப்படுகிறார் இந்த மாதிரியான நேரத்தில் ராயல் நகைக் கடையில் 200 கோடி மதிப்பிலான ஒரு நகை காணாமல் போய்விடுகிறது இதை ஜப்பான் என்கின்ற கார்த்தி தான் செய்திருப்பான் என பலரும் கூறுகின்றனர் ஒரு கட்டத்தில் அவனை பிடிக்க முயற்சி செய்கின்றனர் முதலில் எஸ்கேப் ஆகி வரும் ஜப்பான் கடைசியாக சிக்கி விடுகிறார்.

அவரை விசாரிக்கும் போது அந்த 200 கோடி மதிப்புள்ள நகையை நான் திருடவில்லை வேறு யாரோ திருடி விட்டு என் மேல் பழி போட்டு விட்டார்கள் என கூறுகிறார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், சஸ்பென்ஸ் தான் படத்தின் கதை.. படத்தில் கார்த்தியின் நடிப்பு மிரடலாக இருந்தது. அடுத்து மில்டன் விஜய், ராதா கதாபாத்திரம் போன்றவை நன்றாக இருந்தது.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினியுடன் இணையும் மாஸ் முன்னணி நடிகர்.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்

கே எஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், அணு இம்மானுவேல் போன்றவர்களின் கதாபாத்திரம் பெரிதளவு இல்லை அதேசமயம் சொல்லு கொள்ளும் படியும் சிறப்பாக நடிக்கவில்லை படத்தின் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்கிறது இரண்டாவது பாதியில் ஆரம்பத்தில் சற்று டல்லடிக்கிறது ஆனால் கடைசியை 25 நிமிடம் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறது மொத்தத்தில் ஜப்பான் திரைப்படம் ஓகே..