எளிமையாக இருக்கும் தனது வீட்டை காட்டிய பாண்டியன் ஸ்டோர் மீனா.! நீங்க வேற லெவல் போங்க

சீரியல்களில் நடிக்கும் பல நடிகர்கள் நடிகைகளின் வீடு அற்புதமாக இருக்கும் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறுவார்கள் ஆனால் அது எல்லாம் ஒரு சில நடிகர்கள்,நடிகைகளுக்கு மட்டும் தான் மிகவும் தாழ்ந்த குடும்பத்தில் இருந்து வந்த பல நடிகர்கள்,நடிகைகள் தங்களது வீட்டைப் பற்றி உண்மையாக பேசி விடுவார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கதையை வைத்து எடுத்து வருகிறார்கள் மேலும் இந்த சீரியலில் பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஸ்டாலின்,சுஜிதா,வெங்கட்,ஹேமா,ராஜ்குமார்,சித்ரா,குமரன், தங்கராஜன்,சரவணன்,விக்ரம் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் நடிகைகளாக நடித்து வருகிறார்கள் மேலும் இந்த சீரியல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா.

இவர் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் இவர் முதலில் மீடியாவில் அதிகம் ஆர்வம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலையத்தில் ஹார்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

அதற்கு பின்பு பல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து பின்பு தான் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் களமிறங்கினார்.

இந்நிலையில் இவரது வீடு மிகவும் ஏழ்மையாக இருக்கும் என்பதை இவரே இவரது வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து விட்டாராம் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment