சினிமாவில் எடுத்து வரும் பாடல்கள் திரையரங்கில் வெளிவந்து ஹிட் அடிக்கிறதோ இல்லையோ டிக் டாக்கில் ஹிட்டடித்து வருகிறது.டிக்டாக்கில் ஹிட் அடிக்க அந்தப் பாடலை மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக டிக் டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
குறிப்பாக குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள் தொடங்கி தற்போது முன்னணி பிரபலங்கள் வரை பலர் பயன்படுத்தி வருகின்றனர் அந்தவகையில் ஆஸ்திரேலிய இடது கை அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அவர்கள் சமீபகாலமாக டிக் டாக்கை பயன்படுத்தி வருகிறார் அவர் தனது குடும்பத்துடன் இணைந்து நடனமாடுவது, பாட்டு பாடுவது போன்ற பலவகையான வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளிய வந்தார்.
இதனையடுத்து டிக் டாக் கை அதிகமாக பயன்படுத்த தொடங்கினார் இந்த நிலையில் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனின் முட்டபொம்மா பாடலுக்கும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி என்ற பாடலுக்கும் நடனமாடி இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனையடுத்து ரசிகர்கள் டேவிட் வார்னர் இடம் தெலுங்கு ரசிகர்கள் மகேஷ்பாபுவின் mind block பாடலுக்கு நடனமாட வேண்டும் என கூறியுள்ளனர் இதனை ஏற்றுக்கொண்ட டேவிட் வார்னர் நீங்கள் முதலில் எனக்கு 250k லைக்குகளை கொடுத்தால் நான் நடனம் ஆடுவேன் என கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவர் mind block பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து டிக்டாக்கில் ஆடியுள்ளார். டேவிட் வார்னர் இந்த பாடலுக்காக 50 தடவை முயற்சி செய்து உள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#DavidWarner #Cricket pic.twitter.com/E3J0Fo5h09
— tamil360newz (@tamil360newz) May 30, 2020