ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்ட டேவிட் வார்னர்.! வைரலாகும் வீடியோ

0

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ஹர்பஜன் சிங்கும் முதன்முதலில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் ஏனென்றால் அவர் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

அந்த வகையில் தற்பொழுது டேவிட் வார்னர் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து வருகிறார் ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் டேவிட் வார்னர், இதுவரை இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் தற்பொழுது விளையாடி வருகிறார்.

சமீபகாலமாக டேவிட் வார்னர் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார், சமீபத்தில் கூட ஒரு பாடலுக்கு 50 முறை ரிகர்சல் எடுத்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார், பெரும்பாலும் இவர் தெலுங்கு பட பாடலுக்கு தான் டிக்டாக் செய்துவந்தார்.

இவர் டிக் டாக் செய்த வீடியோக்கள் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் பாடலான முட்டபொம்மா, மைன் பிளாக், பக்கா லோக்கல், பாகுபலி போன்ற பாடலுக்கு டிக் டாக் செய்யும் வீடியோ வெளியிட்டார் இந்த வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதுமட்டுமில்லாமல் பல கிரிக்கெட் வீரர்களையும் இவரது வீடியோ ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

அப்படி இருக்கும் வகையில் தனுஷின் கொலவெறி பாடலுக்கு தற்போது டேவிட் வார்னர் டிக் டாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார், இவர் தற்பொழுது முதல்முறையாக தமிழ் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.