ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் தனது மனைவி மற்றும் மகளுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ !!

0

Australian cricketer David Warner dancing with his wife and daughter: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் அல வைகுந்த புர மூலோ, மேலும் இந்த திரைப்படத்தை இயக்கியவர் விக்ரம் ஸ்ரீநிவாஸ் மற்றும் இந்தப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்கு தமன் அவர்கள் இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்த படத்தில் வரும் புட்ட பொம்மா என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னே இந்தப் பாடல் யூட்யூபில் பல மில்லியன் பெயர்களால் பார்க்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து புட்ட பொம்மா என்ற பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.