தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட.!! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.

0

Australian cricketer David Warner released his exercise video: டேவிட் வார்னர் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது கை தொடக்க மட்டையாளரான இவர் 132 ஆண்டுகளில் முதல் தர துடுப்பாட்ட அனுபவம் எதுவுமின்றி ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது வீரர் ஆவார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே திரைப்பிரபலங்கள், பொதுமக்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் வீட்டில் இருந்த படியே புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது டிக் டாக்கில் நடனமாடுவது, நடிப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு விடுவார்.

டேவிட் வார்னர் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.