bigg-boss

சத்தமே இல்லாமல் மயங்கி விழுந்த அசீம்.! பதற்றத்தில் பிக்பாஸ் வீடு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் அசீம் இன்று திடீரென மயங்கி விழுந்ததைப் பார்த்து ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் பதறிப் போய் உள்ளனர் அது குறித்த புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் தான் அசிம் இவர் தொடங்கிய முதல் நாளிலிருந்து வாரம் தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இவரோடு இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக இருந்து வருகிறார்கள்.

பலரையும் இவர் தரகுறைவாக பேசி வந்த நிலையில் அசிமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கூறி வந்தார்கள். இதன் காரணமாக கமலஹாசன் அசீமை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கண்டித்து வந்த நிலையில் பிறகு இரண்டு வாரங்களாக கமலஹாசனிடம் பாராட்டைப் பெற்று வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் மீண்டும் அவருடைய சுய ரூபத்தை காட்ட தொடங்கினார் எனவே இந்த வாரம் முழுவதும் அவருடைய நடவடிக்கைகள் அனைவருக்கும் முகம் சுளிக்க வைத்தது.

மேலும் இந்த வாரம் இவர்தான் இந்த வீட்டின் கேப்டன் எனவே அவரை எலிமினேட் கூட செய்ய முடியாத நிலையில் ரசிகர்கள் கடுப்பிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு டீம்களாக பிரிந்து ஏலியன், பழங்குடியினர் என நடைபெற்று வருகிறது. அதில் பல சண்டைகள் நடைபெற்ற நிலையில் அமுதவாணனிடம் பெரிதளவில் அசிம் சண்டை போட்டார்.

மேலும் அவருடைய கழுத்தையும் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனவே இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என கூறி வந்த நிலையில் தற்போது திடீரென அசீம் மயங்கி விழும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கார்டன் ஏரியாவில் உள்ள ஷோபாவில் அமர்ந்து கொண்டு கதிரவனிடம் பேசிக் கொண்டிருக்கும் அசிம் திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து பதறிப்போன போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு முதலுதவி அளிக்கின்றனர் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் பதறி உள்ளார்கள்.

maina-nanthini

பொதுமக்கள் என்று கூட பார்க்காமல் திமிராக பேசிய மைனா நந்தினி.! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 50வது நாளை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 50வது நாள் அன்று போட்டியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்டனர் அதில் ஒருவர் மைனா நந்தியினிடம் கேட்ட கேள்விக்கு திமிராக பதிலளித்த மைனாவின் மீது ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் காடு என்ரியாயாக மைனா நந்தினி அறிமுகமானார். பிறகு 21 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஏழு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள் அந்த வகையில் ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் வெளியேறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு 50 நாள் முடிவடைகிறது எனவே போட்டியாளர்களை பல ரசிகர்கள் கேள்வி கேட்டனர் அந்த வகையில் தனலட்சுமி மற்றும் அசிமை போட்டியாளர்கள் பாராட்டுமாறு கூறினர். அதன் பிறகு கதிரவனை நீங்கள் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்ட ரசிகை ஒருவர் ஒருவேளை நீங்கள் அனுபவத்திற்காக வந்திருந்தால் உங்களைப் பார்க்கும் எங்கள் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் என்று கலாய்க்கும் படி கூறினார்.

இதனை எடுத்து பேசிய மற்றொரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா நந்தினியை பார்த்து உங்களுடைய சம்பளம் கொடுக்கும் சுற்றுலா எப்படி போகிறது என்று கேலி செய்தார் அதற்கு பதில் அளித்த ரட்ச்சிதா மற்றும் மைனா எங்களால் முடிந்த அளவிற்கு வரும் நாட்களில் சிறப்பாக விளையாடுவதாக கூறினார்கள்.

பின்னர் நான் என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் உங்களால் முடிந்தால் எனக்கு போன் செய்து வாக்களியுங்கள் இல்லை என்றால் என்னை ஒழியுங்கள் என நக்கலாக பதில் அளித்துள்ளார். இவ்வாறு ரசிகையின் கேள்விக்கு எதார்த்தமாக பதில் அளித்த மைனாவின் பதில் பார்வையாளர்களை கடுப்பேற்றி உள்ளது.

bigg-boss-56

அசீம் மீது திருட்டு புகாரை அளித்துள்ள தனலட்சுமி.! நடுராத்திரியில் கூட வா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அசீம் செய்த திருட்டு வேலைகளை தனலட்சுமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதாவது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாரம் வாரம் டாஸ்க் கொடுப்பதை பிக்பாஸ் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு நடந்த முக்கியமான பிரச்சனைகளை கூறி வழக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் ஏற்றுக்கொண்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது டாஸ்க் தனலட்சுமி அசின் மீது திருட்டுப் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதாவது அதில் தனலட்சுமி கூறியதாவது பிக்பாஸ் வீட்டில் தேவையான விஷயமே உணவுதான். நீங்கள் அனுப்பும் கொஞ்சம் நஞ்ச பழங்களும், தயிரும் காணாமல் போகிறது அதனை அசீம் தான் அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் அது அழுகிப்போன பழம் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு காரணம் சொல்கிறார்.

முக்கியமாக வாழைப்பழம் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது ஒரு நபருக்கு இரண்டு வாழைப்பழங்கள் என்று தான் கொடுக்கிறீர்கள் ஆனால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் என நினைத்துக் கொண்டு தினசரி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை நேரடியாக கேட்க முடியவில்லை பிறகு தயிரை நடுராத்திரியில் எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

இதனால் நான் அசீம் மீது புகார் கொடுக்கிறேன் என தனலக்ஷ்மி கூறும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அசீம் தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கிவரும் நிலையில் தற்பொழுது புதிதாக இதுவரை ஒன்றை உருவாகியுள்ளது.

amudhavanan

பிக்பாஸ் வீட்டில் குளிக்கும் பெண் போட்டியாளரை எட்டி பார்க்கும் அமுதவாணன்.! வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்..

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இதுவரையிலும் தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது.

வழக்கம்போல கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆறு பேர் வெளியாகி தற்பொழுது 15 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது மேலும் இந்நிகழ்ச்சி தற்பொழுது 40 நாட்களை கடந்துள்ளது அனைத்து போட்டியாளர்களும் சர்ச்சைக்குரிய சண்டைகள் போட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் நிகழ்ச்சியின் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் அமுதவானனும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் கலகலப்பாக காமெடி செய்து வந்த இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். மேலும் இவர் சக போட்டியாளர் ஜனனி உடன் நெருக்கமாக பழகி வரும் நிலையில் பலர் கூறியும் அந்த சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது மேற்கும் அமுதவாணன் மைக்கை கழற்றி வைத்துவிட்டு பாத்ரூம் இடையே எட்டி பார்க்கும் காட்சிகள் தான் வீடியோவாக வெளியாகி உள்ளது அப்பொழுது அமுதாவாணன் மைக்கை மாற்றுங்கள் என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் பதறிப் போகிறார் அமுதவாணன்.

இவ்வாறு இதனால் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் அதில் சிலர் ஜனனி தான் குளித்துக் கொண்டிருப்பதாக கூறி வருகிறார்கள். மேலும் சிலர் இல்லை ஷிவின் எனக் கூற இருவரில் யாராக இருந்தாலும் இவ்வாறு குளிப்பதை எட்டிப் பார்ப்பது தவறான ஒன்று. எனவே அமுதவாணனை கமல்ஹாசன் அவர்கள் கண்டிக்க வேண்டும் என ரெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.