மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமலஹாசன் – இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்.?

0
bigboss-
bigboss-

நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் கமீட் நடித்து வருகிறார் அந்த வகையில் முதலாவதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து ஹச். வினோத் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம்..

லோகேஷ் உடன் ஒரு படமும் பண்ண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி கமிட்டாகி இருந்தாலும் மறுபக்கம் இவர் அரசியல், சின்னத்திரை போன்றவற்றிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் 6 வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் 6 வது சீசன்  30 நாட்களை கடந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறுகளில்  கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென லேசான காய்ச்சல், இரும்பல் மற்றும் சளி இருந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். தற்பொழுது மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

இன்னும் ஓரிரு தினங்களிலேயே கமல் ரீசார்ஜ் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த நேராக வீட்டுக்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுக்கும் பட்சத்தில்  இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை  யார்  தொகுத்து வழங்குவார் என்பது கேள்வி.. கடந்த சீசனில் கமல் இல்லாத சமயத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியவர்கள் தொகுத்து வழங்கினர்.

நடிகர் சிம்பு ஒரு வாரம் தொகுத்து வழங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 6 ருக்கு வரமாட்டார் அப்படி பார்த்தால் இந்த தடவை  ரம்யா கிருஷ்ணன் இந்த வாரத்தை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.  பொறுத்திருந்து பார்ப்போம் எல்லாம் கமல் கையில் தான் இருக்கிறது.