அசீம் மீது திருட்டு புகாரை அளித்துள்ள தனலட்சுமி.! நடுராத்திரியில் கூட வா..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அசீம் செய்த திருட்டு வேலைகளை தனலட்சுமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதாவது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாரம் வாரம் டாஸ்க் கொடுப்பதை பிக்பாஸ் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு நடந்த முக்கியமான பிரச்சனைகளை கூறி வழக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் ஏற்றுக்கொண்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது டாஸ்க் தனலட்சுமி அசின் மீது திருட்டுப் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதாவது அதில் தனலட்சுமி கூறியதாவது பிக்பாஸ் வீட்டில் தேவையான விஷயமே உணவுதான். நீங்கள் அனுப்பும் கொஞ்சம் நஞ்ச பழங்களும், தயிரும் காணாமல் போகிறது அதனை அசீம் தான் அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் அது அழுகிப்போன பழம் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு காரணம் சொல்கிறார்.

முக்கியமாக வாழைப்பழம் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது ஒரு நபருக்கு இரண்டு வாழைப்பழங்கள் என்று தான் கொடுக்கிறீர்கள் ஆனால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் என நினைத்துக் கொண்டு தினசரி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை நேரடியாக கேட்க முடியவில்லை பிறகு தயிரை நடுராத்திரியில் எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

இதனால் நான் அசீம் மீது புகார் கொடுக்கிறேன் என தனலக்ஷ்மி கூறும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அசீம் தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கிவரும் நிலையில் தற்பொழுது புதிதாக இதுவரை ஒன்றை உருவாகியுள்ளது.