இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் இரண்டு நபர்கள்.! யார் யார் தெரியுமா.?

0
bigg boss 02
bigg boss 02

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஆறு பேரின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது பற்றி தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி, நிவாஷினி நிவாஷினி ஆகிய ஐந்து பேரும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்கள் இவர்களை தொடர்ந்து ஜி.பி முத்து இரண்டாவது வாரத்தில் தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் தனலட்சுமி, அசிம், கதிரவன், ராபர்ட், அமுதவாணன், ராம், மணிகண்டா உள்ளிட்ட ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் யார் வெளியேறுவார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது மேலும் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட வருகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகி 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த ஏழு வாரங்களில் ஒரு முறை கூட மணிகண்டா நாமினேஷன் லிஸ்டில் இருந்ததில்லை.

முதன் முறையாக நாமினேஷனில் சிக்கி உள்ளார் இப்படிப்பட்ட நிலையில் இந்த நாமினேஷனில் மணிகண்டா மற்றும் ராபர்ட் இருவரும் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இரண்டு பேர் வெளியானால் கண்டிப்பாக இவர்கள் இரண்டு பேரும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது

இவர்கள் இருவரில் ஒருவர் மட்டும்தான் வெளியேற வேண்டும் என்றால் அதில் மணிகண்டா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் எனவே மணிகண்டா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணனுக்காக சோசியல் மீடியாவில் சிபாரிசு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.