pandiyan stores 1

ஜோடியாக இணைந்து குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

தற்பொழுது உள்ள அனைத்து  தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் விரும்பும் வகையில் கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதுமுக நடிகைகள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்துவது மற்றும் அதிகப்படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது போன்றவற்றை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவையும், கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் பிடித்த நாடகமாக திகழ்கிறது. இதனை தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவிற்குப் பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் அறிவுமணி கேரக்டரில் நடித்து வந்த காவியா தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சித்ராவிற்கு காவியாவும் சளைத்தவரல்ல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்து, ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது, புகைப்படங்கள் வெளியிடுவது என்று சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் சீரியலின் படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. எனவே தற்போது பல தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புகளும் ஹைதராபாத் போன்ற வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ஒரு சில சீரியல்கள் மற்றும் குறைந்த நடிகர்,நடிகைகளை வைத்து நிறுவனத்திற்கு உள்ளே செட் போட்டு சீரியலின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களும் மகா சங்கமம் என்ற பெயரில் ஒரே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைக்குட்டியாக நடித்து வரும் சரவணன் விக்ரம் மற்றும் தீபிகா இருவரும் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு  கிளிக் செய்யவும்.

pandiyan stores 1

கிராமத்தில் மாட்டை கழுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.! இந்த லாக் டவுனில் உங்களுடைய நிலைமை இப்படி ஆயிடுச்சே என உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி  நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும் கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது.

அதேபோல் இந்நாடகத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை கதிர் மற்றும் முல்லையின் ஒன் ஸ்கிரீன்  லவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், காவியா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

தற்பொழுது இந்த சீரியலில் ஃபிளாஷ்பேக் கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் மூர்த்தி, ஜீவா, கதிர்,முல்லை, கண்ணன் ஆகிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு பதிலாக குட்டி குழந்தைகள் அறிமுகமாகி வந்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்பொழுது மூர்த்தி மற்றும் தனம் இருவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பதை வைத்து எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது லக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தீபிகா தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு தனது சொந்த ஊரில் பசுமாட்டை கழுவும் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த  ரசிகர்கள் லாக் டவுனால் உங்கள் நிலைமை இப்படி ஆயிடுச்சே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

jeeva

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் ஜீவா தனது குடும்பத்துடன் அடிக்கும் லூட்டி.!

தற்பொழுது கொரோனா பரவலின் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது அதோடு வீட்டை விட்டே யாரும் வெளிவரக் கூடாது என்று முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் சின்னத்திரை வெள்ளித்திரை என்ற அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து நடிகர் நடிகைகளும் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அந்தவகையில் பலரும் தங்களது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் டப்ஸ்மாஷ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆகவே இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இந்த சீரியலில் பல வித்தியாசமான சுவாரஸ்யமான எபிசோடுகள் பங்கு பெறுவதால் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த சீரியலின் பிளாஷ்பேக் கதைகள் மற்றும் மூர்த்தி தனம் திருமணம் உள்ளிட்ட காட்சிகள் நடைபெற்று முடிந்தது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த அவர்தான் நடிகர் வெங்கட்.

இவரும் தனது சிறந்த நடிப்பின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 25) அன்று நடிகர் கவுண்டமணியின் 80வது பிறந்தநாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும் பல ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் தனது மனைவி குழந்தைகளுடன் இணைந்து செந்தில் மற்றும் கவுண்டமணியின் காமெடி ஒன்று இருக்கு டப்ஸ்மாஷ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த பலரும் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.