பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்….. வைரலாகும் புகைப்படம்..

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதையுள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தொலைக்காட்சிதான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவைப்பற்றியும்,  கூட்டுக் குடும்பத்தை பற்றியும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறத.

எனவே இந்த சீரியல் தமிழில் அமோக வரவேற்பை பெற்றதால் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு தற்பொழுது உள்ள பெண்களுக்கு இந்த சீரியல் நல்ல கருத்தை கூறவும் சீரியலாக அமைந்துள்ளது.

 

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இரண்டாவது மருமகளாக மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு தற்பொழுது ஒரு வயதாகும் குழந்தையும் உள்ளது. இவரை தொடர்ந்து முதல் மருமகளாக தனம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் எனவே இதனை கோலாகலமாக கொண்டாடும் வகையில் மிகப் பெரிய மண்டபம் ஒன்றில் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

dhamu 23
dhamu 23

எனவே இதில் சிறப்பு விருந்தினராக குக் வித் கோமாளி தாமு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹேமா மற்றும் சுஜிதா இருவருக்கும் ஒரே நாள் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடிய உள்ளார்கள்.

sujitha-1
sujitha-1