thamizhum saraswathi 8

தமிழ் வைத்த ஆப்பை பார்த்து அதிர்ந்து நின்ன கோதை குரூப்… யார் ஜெயிப்பார் பரபரப்பான போட்டியுடன் தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். அசோசியேஷன் எலக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தமிழும் கோதையும் எதிரெதிராக நிற்கிறார்கள். எப்படியாவது கோதை இந்த எலக்ஷனில் வெற்றி பெற வேண்டும் எனவும் அப்படி தோற்றுவிட்டால் என்னுடைய உயிர் போவதற்கு சமம் எனவும் கூறியிருக்கிறார்.

எனவே அர்ஜுன், கார்த்தி இருவரும் கோதை ஜெயிப்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழும் நமச்சி, சரஸ்வதி துணைவுடன் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதனை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அசோசியேஷனுக்கு பில்டிங் கட்டி தருவதாக தமிழ் வாக்குறுதி கொடுத்திருந்தார் இதனை தெரிந்துக் கொண்ட கோதை பில்டிங் கட்டுவதற்காக மொத்த பணத்தையும் தந்திருக்கும் நிலையில் இதனை மற்ற நபர்களும் ஆதரித்து பாராட்டுகிறார்கள். இதனை ஆபிஸர் மூலம் தெரிந்துக் கொண்ட தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

எனவே கோதையின் இந்த பிளானை மாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய பிளான் ஒன்றை போட அதற்கு அனைவருர் மத்தியிலும் பாராட்டு கிடைக்கிறது. அதாவது அசோசியேஷன் மீட்டிங்கில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க இந்த நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் வருகிறார்கள். அப்பொழுது ஒரு தனி நபர் கொடுத்தால் அது தானமாக தான் இருக்கும் எனக் கூற அதற்கு சரஸ்வதி நம்ம அசோசியேஷனில் 300 பேர் இருக்காங்க ஒவ்வொருத்தங்களும் 40 ஆயிரம் கொடுத்தால் 1 கொடியே 70 லட்சம் ரூபாய் வரும் என சொல்கிறார்.

அதற்கு நமச்சி அந்த பணத்தை வச்சி நம்ப சங்கத்துக்கு இதைவிட பிரம்மாண்டமான கட்டடம் கட்டலாம் இது என்னுடைய பங்கு என தமிழ் 40,000 கொடுக்கிறார் எனவே இது அனைத்து நபர்களுக்கும் பிடித்து விட பாராட்டுகிறார்கள் இதனால் கடுப்பான கோதை வாங்க நம்ம போகலாம் என அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

THAMIZHUM-SARASWATHIYUM-5

மாப்பிள்ளை பேச்சை கேட்டுக் கொண்டு தான் மகன் மீது நெருப்பைக் காக்கும் கோதை.! அர்ஜுனன் சித்து விளையாட்டு இனி தான் ஆரம்பம் தாக்குப் பிடிப்பாரா தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

pandiyan stores 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்வளவு பெரிய பண்ணை வீடா.! வைரல் வீடியோ..

வெள்ளித்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். அப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுஜிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பல திருப்பவர்களுடன் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கூட்டு குடும்ப கதையினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது இவ்வாறு இந்த சீரியலில் மூத்த அண்ணியாக குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் தனம் கேரக்டர் அமைந்துள்ளது.

தனம் தனது ஒட்டுமொத்த குடும்பத்தில் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ வேண்டும் எனவும் அனைவரையும் அனுசரித்து விட்டுக் கொடுத்திருக்கும் மனப்பான்மையில் இருந்து வருகிறார். இவ்வாறு தனத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. சீரியலில் ஏராளமான கேரக்டர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வந்தாலும் தனம் கேரக்டரில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு பல ஆண்டு காலங்களாக சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் புதிய பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்தார்.

அந்த வீட்டின் பூஜை குறித்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்பொழுது யூடியூப் சேனலில் தனது பண்ணை வீட்டை காட்டியுள்ளார் மேலும் அதில் நெல்லிக்காய், மாம்பழம் என நிறைய மரங்களும், செடிகளும் உள்ளது. இதோ அந்த வீடியோ..

thamizhum-saraswathiyum-54

அர்ஜூனின் சூழ்ச்சியினால் மகனிடமே மல்லுக்கட்டும் கோதை.. உயிரே போனாலும் ஜெயிக்கணும்….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் கோதை தமிழ் இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அசோசியேஷன் எலக்சன் நடைபெற உள்ளது.  அர்ஜுனின் சூழ்ச்சி வலையில் சிக்கி அம்மாவிற்கு எதிராகவே தேர்தலில் நிற்கிறார் தமிழ். இதனை அறிந்த கோதை மிகவும் கோபத்தில் உள்ளார்.

இதனால் குடும்பத்தில் அனைவரும் தமிழுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கோதையை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என வெறியுடன் உள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து நமச்சி தமிழ் வீட்டு வேலைக்கார பொண்ணு அபியை நினைத்து வருந்துகிறார். இந்த சூழலில் நமச்சி சோகமாக உள்ளார் அப்போது இதனை அறிந்த  தமிழும் சரஸ்வதியும் உன் மனதில் உள்ள காதலை சீக்கிரமாக அபி இடம் தெரியப்படுத்து என கூறுகின்றனர்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது தமிழ், சரஸ்வதி, நமச்சி மூவரும் எலக்சனுக்காக நாமினேஷன் செய்ய சென்றிருக்கிறார்கள். செய்துவிட்டு வெளியில் வர இவர்களை தொடர்ந்து கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் ஆகியோர்களும் நாமினேஷன் செய்கிறார்கள் பிறகு வெளியில் வந்தவுடன் கோதை தமிழையும் சரஸ்வதியும் எதிரி போல் முறைத்து பார்க்கிறார்.

பிறகு வீட்டிற்கு சென்றவுடன் என்ன ஆனாலும் சரி இந்த எலக்சன்லில் ஜெயித்தே ஆக வேண்டும் அப்படி ஜெயிக்கவில்லை என்றால் என் உயிர் போறதுக்கு சமம் என் நேர்மைக்கு பரீட்சை வைத்திருக்கிறான் எனவே ஜெயிச்சு ஆக வேண்டும், எழுத்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு அவனுக்கு காமிக்க வேண்டும் என மிகவும் கோபமாக கூற  இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு கோதை தமிழை எதிரியாக நினைத்து எலக்ஷனில் தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதை பார்த்து அர்ஜுனனின் குடும்பத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

baakiyalakshmi96

என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கிட்டு முழிக்கும் செழியன்.! சக்காளத்தியா வர அடி போடும் ஃளைன்ட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகா பாக்கியாவின் வீட்டில் தங்கி வருவதனால் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.

போதாக்குறைக்கு ராதிகாவின் அம்மா மையூவையும் ராதிகா கோபியுடன் அழைத்து வந்து விடுகிறார். பாக்யா மயூவை ஏற்றுக்கொண்ட நிலையில் ராதிகாவிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி பேசி வருகிறார்கள். இதனை அடுத்து கோபி மயூக்கு சொல்லி தராதா இனியாவிற்கு சொல்லித் தரதா என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் இனியா படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மயூவிற்கு தூக்கம் வருகிறது ஆனால் லைட் ஆப் பண்ணினால் தான் தூங்க முடியும் என்பதற்காக சிரமப்பட்டு வருகிறார். மையூவை பார்த்த கோபி நீ தூங்கு மையூ எனக் கூற எனக்கு லைட் ஆப் பண்ணாத தூக்கம் வரும் என சொல்கிறார்.

கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என கூற இந்த நேரத்தில் ராதிகாவும் வர லைட் ஆப் பண்ண வேண்டும் என சொல்ல குழந்தை படிச்சுக்கிட்டு இருக்காளே எப்படி லைட் ஆஃப் பண்ண முடியும் அப்படியே படுத்துக்கொள் என சொல்ல ராதிகாவும் படுத்து கொள்கிறார். பிறகு எப்படியாவது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டும் என்று கோபியின் காலில் வேகமாக கையை தூக்கி போட எதற்கு இப்ப என்ன அடிச்ச  என கோபி கேட்கிறார்.

ராதிகா தெரியாமல் கைப்பட்டு விட்டது என சொல்ல பிறகு கோபி வலி தாங்க முடியாமல் கதறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் செழியன் வீட்டிற்கு வந்தவுடன் லேப்டாப்பை மூடி வைக்க ஜெனி எதற்கு முடி வைக்கிறாய் வொர்க் ப்ரம் ஹோம் தான வேலை செய்யயென சொல்ல இல்லை உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என கூறிக் கொண்டிருக்கிறார்.

பிறகு செழியனுக்கு போன் வர யாரு அந்த பெண் க்ளைண்டா என கேட்கிறார் அதற்கு ஆமா நீயும் கேளு என கூறிவிட்டு போன் ஸ்பீக்கரில் போட ஆபிசர் போன் செய்கிறார். இவ்வாறு அந்த மாலினி போன் பண்ணி இருந்தாங்க என்னமோ நம்ப சைடுல கம்யூனிகேஷன் ப்ராப்பரா இல்ல என சொல்லி இருந்தாங்க இந்த டீல முடிச்சுடுறேன்னு சொன்னீங்க ஆனா முடிக்கவில்லையே என கேட்க சார் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன் ஆனால் அவங்க ஒர்க்க பத்தி பேசாம தேவையில்லாத மத்த எல்லாத்தையும் பேசுறாங்க என கூறுகிறார் இவ்வாறு செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் ஆஃபீசரிடம் மாட்டிக் கொள்கிறார்.