பொண்டாட்டி பேச்சைகேட்டுகிட்டு உண்மையை மறைத்த கண்ணன்.! மீண்டும் வீடியோ எடுத்து மூர்த்தியிடம் வாங்கிகட்டிகொண்ட ஐஸ்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandian store
pandian store

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் தனம், முல்லை, மீனா, ஐஸ்வர்யா என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது வளைகாப்பு உங்களால் தான் நின்றது என ஐசு கூற உடனே முல்லை கோபப்பட்டு பேசுகிறார். அந்த சமயத்தில் மீனா மண்டபத்திற்கு கொடுத்த அட்வான்ஸ் வாங்கியாச்சா எனக்கு கேட்க இல்லை என ஐஸ்வர்யா கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பணத்தை கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டதாக கூறுகிறார்கள்.

அதற்கு மீனா சமையல் மாஸ்டருக்கு கொடுத்த காசையாவது வாங்கினீங்களா என கேட்க அவங்களும் கொடுக்கவில்லை என கூறிவிட்டார் ஐஸ்வர்யா அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் இதற்கெல்லாம் ஏது காசு என கேட்க கிரெடிட் கார்டை வைத்து தான் பணத்தை ரெடி பண்ணியதாக பொய் சொல்லுகிறார் ஐஸ்வர்யா. ஆனாலும் தனத்திற்கும் முல்லைக்கும் சந்தேகம் வந்துவிட்டது இவ்வளவு பணம் எப்படி கிரெடிட் கார்டில் ரெடி பண்ணுனீங்க என கேட்கிறார்கள்.

சமையல் மாஸ்டருக்கு எப்படி கிரெடிட் கார்டு மூலம் பணம் கொடுத்த என கேட்க அதற்கு ஐஸ்வர்யா அவருக்கு கொஞ்சம் பணம் சேவிங்கில் வைத்திருந்தோம் அதைக் கொடுத்தோம் எனக் கூற அதற்கு உடனே முல்லை இரண்டு மாதமாக பணமே கட்டவில்லை என்று தானே பேங்காரர்கள் வீட்டிற்கு வந்தார்கள் அப்புறம் எப்படி பணம் சேவிங்கில் வைத்திருந்தீர்கள் என கேட்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் முல்லை வெளியில் போய் மூணு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள சேவிங் எல்லாம் வச்சிருக்கீங்களா என கேள்வி எழுப்புகிறார்.

இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேட்பதால் ஐஸ்வர்யா பதட்டத்தில் கிரெடிட் கார்டு மூலம் தான் பணம் வாங்கியதாக கூறிவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கண்ணன் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது தனம் கண்ணனிடம் வளைகாப்பு செய்வதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது போல் கேட்கிறார் அதற்கு உடனே ஐஸ்வர்யா முந்திக்கொண்டு நான் தான் சொன்னேனே அக்கா கிரெடிட் கார்டு மூலம் என கூறிவிடுகிறார்.

உடனே தனம் இதுக்கும் ஏதாவது கடன் வாங்கி வச்சுடாதடா அண்ணனால தாங்க முடியாது சும்மா எதுக்கு எடுத்தாலும் பெரிய அமௌன்ட் எடுத்து தூக்கி கொடுத்து கொண்டு இருக்க முடியாது என்பது போல் தனம் கூறுகிறார் கண்ணனும் அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி என கூறி விடுகிறார் தனம் காபி எடுக்க போகும் பொழுது ஐஸ்வர்யா கண்ணனிடம் பணம் ரெடி பண்ணியாச்சா என கேட்கிறார் பணத்தை எடுத்துக் காட்டிய பிறகு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது எனவும் கேட்கிறார் தெரிஞ்சவங்களிடம் வாங்கினேன் என கூறி விடுகிறார் கண்ணன்.

பிறகு இரவு சாப்பிடும் பொழுது அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஐஸ்வர்யா மட்டும் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு வீடியோ போடுவதற்காக என்ன சாப்பாடு என்பதை வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மூர்த்தி கோபப்படுகிறார் அது மட்டும் இல்லாமல் தினமும் ஐஸ்வர்யாவை திட்டுகிறார் ஆனாலும் அடங்காமல் வீடியோ எடுக்கிறார் முல்லையும் திட்டுகிறார் அப்பவும் அடங்காமல் வீடியோ எடுக்கிறார் பின்பு மூர்த்தி திட்டி விடுகிறார் அதன் பிறகு தான் வீடியோவை எடுக்காமல் நிறுத்தி வைத்துவிட்டு சாப்பிட தொடங்குகிறார். அடுத்த காட்சியில் ஜனார்த்தனன் ஜீவாவுக்கும் மீனாவுக்கும் புதிதாக கார் வாங்கியுள்ளார் அதனை மொபைலில் காட்டிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது எதற்கு கார் என கேட்கிறார் ஜீவா நீங்கள் இரண்டு பேரும் கார்ல ஜம்முன்னு வர்றதுதான் நல்லது என மீனாவின் அம்மா கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.